For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள் கைது

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.

ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே உதவித்தொகை என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசு வீடுகள் வழங்கும் திட்டத்தில் 5 சதவீத வீடுகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

தமிழக பட்ஜெட்டில் ரூ. 5 ஆயிரம் கோடி மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

தென்காசியில் நடந்த போராட்டத்தில் 28 ஆண்கள், 9 பெண்கள் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 200க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

English summary
Police arrested differently abled persons for protesting condemning TN government puttingforth demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X