"மலர்களில் ஆடும் இளமை புதுமையே"...புதுவையில் "அனுபவி தங்கதமிழ்செல்வன் அனுபவி"!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் ரிலாக்ஸ் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
புதுச்சேரி : சின்னவீராம்பட்டினம் தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பூங்காக்களில் சறுக்க மரம் விளையாடுவது, ஊஞ்லாடுவது என்று உற்சாகமாக நேரத்தை கழித்து வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரை சந்தித்து டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியே கடிதம் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் 19 பேரும் புதுச்சேரி மாநிலம் சின்னவீராம்பட்டினத்திலுள்ள தி விண்ட் ஃப்ளவர் ரெசார்ட்டில் தங்கியுள்ளனர்.
தினகரன் தரப்பு எம்எல்ஏக்களை எதிர் அணி தங்கள் வசம் இழுத்துவிடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் ஓய்வு எடுப்பதற்காக ஒற்றுமையாக விடுதியில் தங்கியுள்ளதாக தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

என்ஜாய் செய்யும் எம்எல்ஏக்கள்
புதுச்சேரி சென்றது முதலே கடற்கரை பகுதியில் வாக்கிங் செல்வது, ஜாகிங் செல்வது என்று செமயாக என்ஜாய் செய்து வருகிறார்கள் எம்எல்ஏக்கள். அதிலும் குறிப்பாக எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் பூங்காவில் உள்ள சறுக்கு மரத்தில் ஏறி விளையாடுவது, சீ சா விளையாடுவது என்று குழந்தைகள் போல விளையாடி வருகிறார்.
|
ஊஞ்சலில் விளையாடும் தங்கதமிழ்செல்வன்
கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சலில் உட்கார்ந்து "மலர்களில் ஆடும் இளமை புதுமையே, மனங்களில் ஆடும் நினைவு இனிமையே" என்கிற ரீதியில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். ரிலாக்ஸ் செய்ய சென்ற எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து கைப்பந்தாட்டம் விளையாடுவது, கடற்கரையை ஒட்டியுள்ள உணவு உண்ணும் இடத்தில் பிடித்த உணவுகளை உண்பது என்று செமையான வாழ்க்கையை வாழ்கின்றனர்.

பாதுகாப்பில்லை
எம்எல்ஏக்கள் மனச் சோர்வில் உள்ளனர், நாங்கள் இங்கு வந்து ஓய்வெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை அதனால் தான் இங்கு வந்திருக்கிறோம் என்று தங்கதமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தினகரன் சந்திப்பு
நாளை வரை எம்எல்ஏக்கள் அங்கு தங்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையே தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை இன்று சந்திக்கச் செல்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications