தினகரனுக்கு கை கொடுக்கும் எடியூரப்பா வழக்கு தீர்ப்பு! பாயிண்ட்டை பிடித்த தவே
சென்னை: கர்நாடகாவில் எடியூரப்பா அரசுக்கு எதிராக எம்எல்ஏக்கள் செயல்பட்டதை போலவே தமிழகத்திலும் செயல்பட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தினகரன் அணி தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.
கட்சித்தாவல் தடைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்துள்ளதாகவும், சபாநாயகர் ஒரு கட்சியை சேர்ந்தவர் போல நடந்துகொண்டதாகவும் துஷ்யந்த் தவே வாதிட்டார்.

குறிப்பாக கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து சென்றதையும், அவர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என சுப்ரீம் கோர்ட் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிருப்தி வேறு கட்சித் தாவல் வேறு என்பதை எதியூரப்பா வழக்கு தீர்ப்பு மூலம் சுட்டி காட்டினார் தவே.
எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் எழுதிய கடிதம் போல தினகரன் எம்.எல்.ஏக்கள் கடிதம் எழுதினர் என்றும்,18 எம்.எல்.ஏக்களுக்கும் அரசுக்கு எதிராக ஒருபோதும் செயல்படவில்லை என்றும் தவே தெரிவித்தார். எடப்பாடிக்கு பதிலாக வேறு முதல்வரை தேர்வு செய்தால் ஆட்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளபோது கட்சித் தாவல் எப்படி பொருந்தும் என்றும் தவே கேள்வி எழுப்பினார்.
எடியூரப்பாவுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தை போலவே தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் கடிதம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி












Click it and Unblock the Notifications