சசிகலா எட்டடின்னா தினகரன் பதினாறு அடி... முந்திக்கொண்டு சட்டசபை போகும் முதல் மன்னார்குடி வாரிசு!
சசிகலா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட நினைத்தார், ஆனால் தினகரன் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
Recommended Video

சென்னை : முதல்வராக பொறுப்பேற்று அதன் பின்னர் போட்டியிட சசிகலா திட்டமிட்டார், தினகரனோ தேர்தல் களத்தை சந்தித்துவிட்டு அதன் பின்னரே சட்டசபை செல்வேன் என்று உறுதியாக இருந்து போட்டியிட்டு தற்போது தேர்தலில் தொடர்ந்து 4 சுற்றுகளிலும் முன்னிலையில் உள்ளார் தினகரன். 4 சுற்றுகளிலேயே சுமார் 11 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகிக்கிறார்.
அதிமுகவில் மறைமுகமாக ஆட்சி செலுத்தி வந்த மன்னார்குடி குடும்பத்தின் முதல் நபராக சட்டசபைக்கு நேரடியாக செல்லும் நபராக மாறியுள்ளார் டிடிவி. தினகரன். இதுவரையில் சசிகலா குடும்பத்தின் மறைமுக ஆதிக்கமானது அதிமுகவிலும், ஆட்சியிலும் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது. ஜெயலலிதாவை பின்னால் இருந்து சசிகலா தான் இயக்குகிறார் என்றெல்லாம் தொடர்ந்து கூறப்பட்டது.
அதிகாரிகள் நியமனமானாலும், வேட்பாளர்கள் தேர்வானாலும் சசிகலாவின் ஆதிக்கம் மற்றும் மன்னார்குடி குடும்பத்தின் ஆதிக்கம் என்பது இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதன் காரணமாகவே ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலாவை பொதுச்செயலாளராக பொறுப்பேற்க காலில் விழுந்து கேட்டு கொண்டனர் அதிமுகவின் நிர்வாகிகள்.

முதல்வராக திட்டம் போட்ட சசிகலா
இதனையடுத்து டிசம்பரில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா, பிப்ரவரியில் முதல்வராவதற்கான பணியில் இறங்கினார். சசிகலாவை முதல்வராக முன்மொழிந்து ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்ட போதும் ஆட்சியமைக்க கோராமல் தாமதப்படுத்தி வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுவிட தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறின.

10 ஆண்டுகள் போட்டியிட முடியாது
ஆட்சிக்கு வர நினைத்தற்காகவே சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டே ஒதுக்கி வைக்க டெல்லியில் இருந்து திட்டம் அரங்கேற்றப்பட்டது. சசிகலா இன்னும் 10 ஆண்டுகள் போட்டியிட முடியாது என்ற நிலையில் கடந்த முறை சசிகலாவின் ஆதரவுடன் வேட்பாளராக களமிறங்கினார் தினகரன்.

சசிகலா ஆதரித்தாரா தினகரனை
ஆனால் இந்த முறை தினகரனை சசிகலா வேட்பாளராக முன்மொழிந்தாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வருகிறது. சசிகலாவின் கணவர் நடராஜனும் தினகரன் போட்டியிட சசிகலா ஆதரவு தெரிவித்தாரா என்பது அவர் சொன்னால் ஒழிய தெரியாது என்று கூறி இருந்தார்.

தினகரனுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு
ஜெயலலிதா வீடியோ விவகாரத்தில் இளவரசியின் வாரிசுகளின் எதிர்ப்பு, நடராஜனின் எதிர்ப்பு என குடும்பத்தினர் பலரின் எதிர்ப்பை மீறித் தான் தினகரன் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் இன்று அவர் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறார்.

16 அடி பாய்ந்த தினகரன்
சசிகலா எட்டடி பாய திட்டமிட்டால், அவரை முந்திக் கொண்டு 16 அடி பாய்ந்து சட்டசபைக்கு செல்கிறார் மன்னார்குடியின் முதல் எம்எல்ஏவாக, அதுவும் சுயேச்சை எம்எல்ஏவாக. கடந்த 1994ம் ஆண்டு முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் பெரியகுளம் லோக்சபா தொகுதியின் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications