அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவர் தினகரன்.. நாஞ்சில் சம்பத்
அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவர் டிடிவி தினகரன் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
சென்னை; அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவர் டிடிவி தினகரன் என்று அதிமுக அம்மா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை பெசண்ட் நகரில் உள்ள அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வீட்டிற்கு நாஞ்சில் சம்பத் சென்றார். அங்கு அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர், நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நாடகம்
அரசு பணத்தை செலவழித்துக் கொண்டு திட்டம் தீட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இணைப்பு என்பது ஒரு நாடகம்.

அதிர்ச்சி
ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் மீண்டும் இணைவார்களா என்று தெரியவில்லை. அவர்கள் எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காக நினைத்து இப்படிச் செய்கிறார்களா என்பது தெரியாது.

பொதுச் செயலாளருக்கே அதிகாரம்
இணைவதற்கான வாய்ப்பு இருக்குமானால் நேற்று முன்தினமே இணைந்திருக்க வேண்டும். அதிமுகவின் பொதுக் குழுதான் அதிமுகவின் சட்ட திட்டங்களை மாற்ற முடியும். அதனை பொதுச் செயலாளர்தான் தீர்மானிக்க வேண்டும். அதிமுகவில் எல்லா அதிகாரமும் பொதுச் செயலாளரிடம்தான் உண்டு.

மணல் வீடு
இவர்கள் மணல் வீடு கட்டி மகிழ்கிற பிள்ளை விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் என்ன செய்தாலும் அவர்கள் நினைப்பது ஈடேறாது.

அரசியல் அனாதைகள்
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் அரசியல் அனாதைகள் ஆக்கப்படுவார்கள். டிடிவி தினகரன் அதிமுகவின் தவிர்க்க முடியாத தலைவர் என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.












Click it and Unblock the Notifications