ஆமாம்.. தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூது விட்டாங்க.. தமிழிசை அதிரடி!!
தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என பலமுறை தூதுவிட்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரன் கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என பலமுறை தூதுவிட்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அதிமுகவையும் அமமுகவையும் இணைத்துக்கொள்ளலாம் என தூதுவிட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்திருந்தார், அதற்கான ஆதாரம் உள்ளது என்றும் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், அதிமுகவுடன் சேர்வது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழிசை கருத்து
இந்நிலையில் தினகரனின் அமமுக கட்சியினர் தங்களுக்கும் தூதுவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் உயர்கல்வி மேம்பாட்டு குறித்த கருத்தரங்க நிகழ்வு நடைபெற்றது.

பாஜகவுக்கும் தூது
இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என தினகரன் கட்சியினர் தூதுவிட்டனர். பல நாட்களுக்கு முன் தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூதுவிட்டனர்.

தர்மசங்கடமான யுத்தமா?
தினகரன் ஒரு கருத்தைச் சொன்னார். அதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் எந்த சூழ்நிலையில் அவரைப் பார்த்தேன் என்று சொல்லிவிட்டார். அது தர்மயுத்தமா, தர்மசங்கடமான யுத்தமா என்று சொல்ல இயலாது.

குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால், தினகரன் கட்சியைச் சார்ந்தவர்கள் சில குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

அரசியல் நிகழ்வு
யார் யாரைப் பார்த்தார்கள் எதற்காக பார்த்தார்கள் என்பது விளக்கம் தரப்பட்டிருக்கிறது. டி.டி.வி தினகரன் பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக எங்களுக்கே தூது அனுப்பினார், இது அரசியல் நிகழ்வு. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications