ஆறுமுகசாமியிடம் தினகரன் தரப்பு பென் டிரைவ் சமர்ப்பிப்பு.. ஜெ.சிகிச்சை வீடியோக்கள் அதில் இருக்கா?
ஆறுமுகசாமி கமிஷனிடம் தினகரன் தரப்பினர் பென் டிரைவை சமர்ப்பித்துள்ளனர்.
சென்னை : ஆறுமுகசாமி கமிஷனிடம் தினகரன் தரப்பினர் பென் டிரைவை சமர்ப்பித்துள்ளனர். அதில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்கள் இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அவர் தனது விசாரணை தொடங்கினார். இதற்காக அவருக்கு எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு, அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவன், தலைமை செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை 7 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தங்களிடம் உள்ள பென்டிரைவை தினகரன் தரப்பு இன்று ஆறுமுகசாமி கமிஷனிடம் ஒப்படைத்தது. இதை தினகரன் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி ஆஜராகி ஒப்படைத்தார்.அந்த பென்டிரைவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ இருக்கலாம் என தெரிகிறது.
இந்நிலையில் பென் டிரைவை சமர்ப்பித்த வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பென்டிரைவில் என்ன இருந்தது என்பது பற்றி எனக்கு தெரியாது.
தினகரன் சார்பில் என்னிடம் கொடுக்கப்பட்ட பென் டிரைவை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளேன். அவ்வளவுதான். வெற்றிவேல் அவரிடம் இருந்த ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார் என்றார் ராஜா செந்தூர்பாண்டி.
இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி ஜெயலலிதா சிகிச்சை வீடியோ என்று ஒன்றை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது உண்மையா போலியா என்ற விவாதமே நடைபெற்றது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications