எடப்பாடி ஆட்சியை அகற்ற என்னோடு வந்து கோயிலில் சாமி கும்பிட்ட திமுக நிர்வாகிகள்... பற்ற வைத்த தினகரன்
காஞ்சிபுரம் அருகே என்னுடன் சேர்ந்து திமுகவினர் எடப்பாடி ஆட்சியை அகற்ற வழிபாடு நடத்தினர் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருச்சி: எடப்பாடி ஆட்சியை அகற்ற என்னுடன் சேர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலில் திமுகவினர் வழிபாடு நடத்தியதாக திருச்சி நீட் தேர்வு பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் கூறினார்.
திருச்சியில் உழவர் சந்தையில் கடந்த 9-ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான பொதுக் கூட்டம் நடத்த டிடிவி தினகரன் அனுமதி கோரினார். ஆனால் அன்றைய தினம் வேறு அமைப்பினர் அந்த இடத்தில் கூட்டம் நடத்துவதால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று திருச்சி உழவர் சந்தையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தினகரன் கலந்து கொண்டு பேசினார்.
இந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில் அனிதாவின் குழுமூர் கிராமத்துக்கு சென்ற போது அப்பகுதி மக்கள் எடப்பாடி ஆட்சியை அகற்றுங்கள் என்றார்கள். அது உங்களால் மட்டுமே முடியும் என்றும் தெரிவித்தனர்.

காஞ்சி கோயிலில்...
அதேபோல் மக்களுக்கு விரோதமாக உள்ள எடப்பாடி ஆட்சியை அகற்ற காஞ்சிபுரம் கோயிலில் தொண்டர்களுடன் சேர்ந்து வழிபாடு நடத்தினேன். அப்போது எங்களுடன் திமுகவினரும் சேர்ந்து வழிபாடு நடத்தினர்.

முன்ஜாமீன்
பழனியப்பன், செந்தில் பாலாஜி மீது எடப்பாடி அரசு பொய் வழக்கு போட்டுள்ளது. ஆனால் அந்த பொய் வழக்கில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார்.

அதிமுகவை பாதுகாக்க...
அதிமுகவை பாதுகாக்க ஒரு மாதமாக போராடி வருகின்றனர் எம்.எல்.ஏக்கள். எடப்பாடியுடன் சேர்ந்து ஆளுநரின் உதவியோடு சபாநாயகர் தனபால் அவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டார்.
|
குறுக்கு வழியில்...
தகுதி நீக்கம் செய்துவிட்டு குறுக்கு வழியில் மெஜாரிட்டி காட்டலாம் என நினைக்கின்றனர். நீதிமன்றங்கள் இருப்பதையே ஆணவக்காரர்கள் கண்கள் மறைத்துவிட்டன என்றார் தினகரன்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications