முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்- ஆளுநரிடம் தனித்தனியே கடிதம் தந்த தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர்.
ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்று தனித்தனியே கடிதம் தந்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் பழனிச்சாமி மீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்; முதல்வர் பழனிச்சாமி மீது எம்.எல்.ஏ.வாகிய நானும் நம்பிக்கை இழந்துவிட்டேன்.

ஆதரவு வாபஸ்
ஆகையால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இக்கடிதம் மூலம் திரும்பப் பெறுகிறேன். என்னுடைய இக்கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழலை ஊக்குவிக்கிறார்
முதல்வர் நேர்மையற்றவராகவும் பாரபட்சம் காட்டக் கூடியவராகவும் இருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊழலை ஊக்குவிப்பதால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகத்தை...
எடப்பாடி பழனிச்சாக்கான ஆதரவை வாபஸ் பெற்றாலும்கூட நான் அதிமுகவின் உறுப்பினரே. அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தும் வகையில்தான் ஆதரவை வாபஸ் பெறுகிறேன்.

ஓபிஎஸ்
அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் அதிகரித்துள்ளது. ஊழலை மறைக்கவே ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு












Click it and Unblock the Notifications