இபிஎஸ் இன்னொரு ஓபிஎஸ்- தினகரனிடம் பற்ற வைக்கும் எம்.எல்.ஏக்கள்- வெடித்து கிளம்பும் கொங்கு கோஷ்டி!
சென்னை: அதிமுகவின் இன்னொரு ஓபிஎஸ்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என டிடிவி தினகரனிடம் அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து போட்டு கொடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் அதிமுக ஓபிஎஸ், அதிமுக இபிஎஸ், அதிமுக தினகரன் கோஷ்டி என வெளிப்படையாக உடைந்துள்ளது. இவை அல்லாமல் ஜாதிய அடிப்படையிலான கோஷ்டிகளும் வரிசைகட்டு நிற்கின்றன.
டிடிவி தினகரன், திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் முதல்வர் இபிஎஸ்-ன் கொங்கு கோஷ்டி கை ஓங்கியது. இதற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தினகரன், இபிஎஸ் கோஷ்டி மோதல்
இந்த கோஷ்டி வசம் உள்ள நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி, பாஜகவை கடுமையாக விமர்சித்தது. ஆனால் இபிஎஸ் கோஷ்டியோ பாஜகவுடன் இணக்கமாக போனது. இந்த பஞ்சாயத்து இப்போது பகிரங்கமாக வெடித்திருக்கிறது.

மீண்டும் அதகளம்...
இந்நிலையில் தினகரன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அவர் அளித்திருக்கும் பேட்டிகள் அனைத்துமே மீண்டும் அதிமுகவில் அதகளப்படுத்தப் போகிறார் என்பதையே காட்டுகின்றன.

எம்.எல்.ஏக்களிடம் கருத்து கேட்பு
இதை இபிஎஸ் கோஷ்டி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது தினகரனை அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இச்சந்திப்புகளில் எம்.எல்.ஏக்களின் கருத்துகளை அதிகநேரம் கொடுத்து கேட்டு வருகிறார் தினகரன்.

எகிறும் கொங்கு கோஷ்டி
இதில் எதிரி ஓபிஎஸ்ஸை கூட மன்னித்துவிடலாம் துரோகி இபிஎஸ்ஸை மன்னிக்கவே கூடாது என கொளுத்திப் போடுகின்றனர் எம்.எல்.ஏக்கள். இதனால் கொங்கு கோஷ்டி கொந்தளிப்பில் இருக்கிறது. அதிமுகவில் எந்த நேரத்திலும் மேலும் ஒரு டமால் சப்தம் கேட்பது நிச்சயம் என கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications