For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்ச மாடு கம்பங் கொல்லைய பார்த்த மாதிரி.. அதிமுக ஆட்சியை விளாசி தள்ளிய புகழேந்தி!

அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடம் கொள்ளை நடைபெறுவதாக தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நிமிடம் கொள்ளை நடைபெறுவதாக தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் வழங்கியது தொடர்பான வழக்கில், டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்திக்கு கர்நாடக லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

சாதாரண கைதிகள் போல்

சாதாரண கைதிகள் போல்

அப்போது அவர் பேசியதாவது, சசிகலாவின் பெயரை சொல்லி சிலர் பெயர் வாங்க முயற்சி செய்கின்றனர். சசிகலா சாதாரண கைதிகள் அணியும் உடையைதான் அணிகிறார்.

லஞ்சம் கொடுக்கவில்லை

லஞ்சம் கொடுக்கவில்லை

சட்டத்திற்கு உட்பட்டுதான் டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்து வருகிறார். சசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதி கேட்டு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை.

வெளியில் வர முடியாது

வெளியில் வர முடியாது

பரப்பன அக்ரஹார சிறையில் 97 கேமராக்கள் உள்ளன. அவற்றை தாண்டி யாரும் உள்ளேவும் போக முடியாது. சிறையில் இருந்து யாரும் வெளியில் வரவும் முடியாது.

கொள்ளை ஆட்சி

கொள்ளை ஆட்சி

அதிமுக ஆட்சியை எப்போது வீட்டிற்கு அனுப்பலாம் என மக்கள் காத்துக்கொண்டு உள்ளனர். தமிழகத்தில் நடைபெறுவது கொள்ளை ஆட்சி.

கம்பங்கொல்லையை பார்த்தது

கம்பங்கொல்லையை பார்த்தது

காய்ந்த மாடு கம்பங் கொல்லையை பார்த்தது போல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அனைகூரும் கொள்ளையடிக்க தொடங்கிவிட்டனர்.

விரைவில் வீட்டுக்கு செல்லும்

விரைவில் வீட்டுக்கு செல்லும்

இந்த ஆட்சியில் ஒவ்வொரு நிமிடமும் கொள்ளை நடைபெறுகிறது. கொள்ளை ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.

English summary
Dinakaran supporter Pugazhendi slams Tamilnadu govt. The govt is corruption in all the time he said further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X