ரெய்டு மூலம் வெளிச்சத்துக்கு வந்த தினகரன்- விவேக் ஈகோ யுத்தம்: பஞ்சாயத்துக்கும் படியலையே
டிடிவி தினகரன், விவேக் இடையே நடைபெறும் ஈகோ யுத்தம் வருமானவரி சோதனை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள் வீடுகளில் நடந்த ரெய்டு மூலம் டிடிவி தினகரன், விவேக் இடையே நடைபெறும் ஈகோ யுத்தம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர சசிகலா குடும்பத்தின் மூத்த தலைவர்கள் பஞ்சாயத்து செய்தும் படியவில்லையாம்.
இந்த மோதலால் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ? 30 வருஷம் கட்டிக்காத்த மரியாதை, சம்பாதித்த சொத்துக்களை இழக்கப் போகிறோமே என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர் சசிகலா குடும்பத்தினர்.

பிரிவே காரணம்
டிடிவி தினகரனுக்கும், விவேக்கிற்கும் இடையே பனிப்போர்தான் ரெய்டுக்கு காரணம் என்று சசிகலா குடும்ப உறவுகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. எனவேதான் பிரிவை மறந்து ஒன்று கூடுங்கள் என்று பேசியுள்ளார் சசி குடும்பத்தின் மூத்த உறுப்பினர்.

இப்படி இருக்காதீங்க
விவேக் வீட்டிற்கு முதலில் போன அந்த உறுப்பினர், ரெண்டு பேரும் முட்டிக்கிட்ட மத்தவங்களுக்கு கொண்டாட்டம். கட்சி, ஆட்சியை கைப்பற்றவதை விட கட்டிக்காத்த சொத்துக்கள் கை விட்டு போயிடும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு விவேக், தினகரன் மீது புகார்களை அடுக்கினாராம்.

யாருமே பேசலையே
சசிகலா ஜெயில்ல இருந்து வெளியே வர வரைக்கும் யாரும் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணும். அதுக்கு நாம எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும் என்று அட்வைஸ் செய்தாராம். அதற்கு விவேக் கூறியது அந்த உறுப்பினரை ஷாக் ஆக வைத்து விட்டதாம்.

எம்எல்ஏக்கள் வரலையே
18 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு எதுவுமே பேசம இருந்து விட்டார் தினகரன் என்பதுதான் விவேக்கின் ஆதங்கம். போனில் கூட விசாரிக்கவில்லையாம். அப்போ எங்க வீட்ல 5 நாள் ரெய்டு நடந்து அவருக்கு சந்தோசமா என்று கேட்டாராம் விவேக். இந்தா இருக்கிற அடையாறுல இருந்து அவர் வராட்டியும், எம்எல்ஏக்கள் ஒருத்தர் கூட எட்டி பார்க்கலையே என்று கேட்டாராம்.

தினகரன் வாசித்த புகார்
அதை அப்படியே தினகரனிடம் போய் சொல்லி, ஏன் இப்படி இருக்கீங்க என்று கேட்டாராம் அந்த பிரமுகர், அதற்கு தினகரனோ, அவங்க வீட்ல மட்டும் ரெய்டு நடக்கலையே, 187 எடத்துல நடந்துச்சே என்று அசால்டாக சொன்னாராம். அவர்தான் கையெழுத்து போட இடத்தில இருக்கோம்னு ஆடிட்டு இருக்கார், சொல்லி வைங்க என்று சொன்னாராம்.

எஸ்கேப் ஆன பிரமுகர்
பஞ்சாயத்து படிந்த பாடில்லை. அரசியலுக்கு வர ஆசைப்படும் விவேக், என்னை மட்டம் தட்டாமல் இருக்கட்டும் என்று தினகரன் கூறியதை கேட்டு ஜெர்க் ஆன அந்த பிரமுகர் வந்த வழியே பேசாமல் சென்று விட்டாராம். இந்த ஈகோ யுத்தம் மூலம் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ என்று கவலையில் இருக்கிறாராம் சசிகலா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications