திண்டுக்கல்.. 251 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட உதவி பி.ஆர்.ஓ அருண் சஸ்பெண்ட்
திண்டுக்கல் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ அருண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல்: 251 கிலோ கஞ்சா போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏ.பி.ஆர்.ஓ அதாவது மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி அருண் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் ஏபிஆர்ஓவாக அதாவது மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 33 வயதுடைய அருண்குமார்.

நேற்று முன்தினம் முன்பு அருண்குமார் தனது வீட்டிலிருந்தபோது, சென்னையிலிருந்து வந்த மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்குள் அதிரடியாக சென்றனர். பின்னர் அவரது காரையும் சோதனை செய்தனர். அப்போது அவரது காரில் தடை செய்யப்பட்ட 251 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றினை பறிமுதல் செய்த போலீசார் அருண்குமார் உள்ளிட்ட மேலும் 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அருணை, பணியிடை நீக்கம் செய்து, திண்டுக்கல் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 12ஆம் தேதி தனது காரில், 251 கிலோ கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்ததாக, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அருண், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் உத்தரவின்பேரில், கைது செய்யப்பட்ட நாள் முதலே, பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அலுவலக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications