திண்டுக்கல் இந்து முன்னணி பிரமுகர் கொலையில் இந்து மக்கள் கட்சிக்கு தொடர்பு- 3 பேர் மீது வழக்கு!
திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய இந்து முன்னணி பிரமுகர் கொலையில் இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் தர்மா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் இந்து முன்னணி அமைப்பாளர் கொலை தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் தர்மா உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த 3 குற்றவாளிகளும் திருப்பூரில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததால் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த மணிமாறன் மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதனால் திண்டுக்கல் நகரில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் இக்கொலையில் இந்து மக்கள் கட்சியினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இக்கொலை தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் தர்மா மற்றும் ராகவன், மகேந்திரன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் கொலையாளிகள் 3 பேரும் திருப்பூருக்கு தப்பி ஓடி பதுங்கியிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால் தனிப்படை போலீசார் திருப்பூருக்கு விரைந்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சியில்தான் கொல்லப்பட்ட மணிமாறனும் இருந்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர்தான் இந்து முன்னணியில் அவர் இணைந்தார். பாரதிபுரத்தில் விநாயகர் சதுர்த்தியன்று சிலை வைப்பதில் தர்மாவுக்கும் மணிமாறனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தே மணிமாறன் கொலை செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைக்கு வேறு ஒரு மதத்தினர் காரணம் என கூறி வெறியாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இந்து முன்னணியின் சக நிர்வாகிகளே அக்கொலைக்கு காரணம் என்பது பின்னர் அம்பலமானது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications