40 தொகுதிகளில் அதிமுக - காங்கிரஸ் நேரடி போட்டி... காங்கேயத்தில் மட்டும் தனியரசுடன் போட்டி !
சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கட்சிகளிடையே 40 தொகுதிகளில் நேரடியான போட்டி நிலவுகிறது. காங்கேயத்தில் மட்டும் அதிமுக கூட்டணி கட்சியான கொங்கு இளைஞர் பேரவை தனியரசுடன் காங்கிரஸ் கட்சிக்கு நேரடி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக-காங்கிரஸ் நடுவே கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்திப்பில் இறுதியானது.

இந்நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதையடுத்து தற்போது காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டன.
அந்த 41 தொகுதிகள் எவையெவை என்பதற்கான பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டார். அதில் காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவித்துள்ள 40 தொகுதிகளில் ஆளும் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் காங்கேயத்தில் மட்டும் கொங்கு இளைஞர் பேரவை கட்சியுடன் காங்கிரஸ் கட்சிக்கு போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு அங்கு போட்டியிடுகிறது. மேலும் அவர் இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடுவதால். ஏறத்தாழ காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் அதிமுக - காங்கிரஸ் நேரடியாக மோதுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் போட்டியிடும் திருமங்கலம், குளச்சல், முதுகுளத்தூர் உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, அதிமுக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications