நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவப்படுகிற வன்முறை... இயக்குனர் கவுதமன் கண்டனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நீட் தேர்வு மாணவர்கள் மீது ஏவப்படுகிற வன்முறை..வீடியோ

  சென்னை : நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது ஏவப்படுகிற வன்முறை என்று இயக்குனர் கவுதமன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் விலக்கு கோரி 2 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறவில்லை என்றும் கவுதமன் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கவுதமன் கூறியதாவது : நீட் விலக்குக்காக உறுதியான நம்பிக்கையான செயல்திட்டத்தை அரசு முன்எடுக்கவே இல்லை. இது நினைத்து பார்க்க முடியாத அளவு எங்கள் மண் மீதும் மாணவர்கள் மீதும் திணிக்கப்படுகிற வன்முறை.

  தமிழக சட்டசபையில் 2 முறை நீட் விலக்குக்கான தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த சட்டவரைவை மத்திய அரசு மதித்திருக்க வேண்டும். இதனை உடனடியாக குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி அவரின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

  தீர்மானத்தை மதிக்கவில்லை

  தீர்மானத்தை மதிக்கவில்லை

  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்காமல் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் சென்று மாணவர்களை வதைக்கிறது மத்திய அரசு. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழிப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

  வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு

  வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு

  நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் உரிமையை மத்திய அரசு வன்முறையாக பறிக்கும் செயலைத் தான் செய்திருக்கிறது. சட்டசபையில் போடுகின்ற தீர்மானம் என்பது நீதிமன்றத்தாலே மாற்ற முடியாது, ஆனால் எந்த அடிப்படையில் இதனை மத்திய அரசு தட்டிக்கழித்தது என்று கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.

  மாணவர்களுக்கு மனநோய்

  மாணவர்களுக்கு மனநோய்

  வடமாநில மாணவர்கள் ஒரு படிப்பு படித்தால் போதும். ஆனால் தமிழக மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஒரு பாடம், நீட் தேர்வுக்கு ஒரு பாடம் படிக்க வேண்டியுள்ளது. இது மாணவர்களுக்கு சொல்ல முடியாத மனநோயை ஏற்படுத்தி இருக்கிறது.

  எதிர்காலம் அழிப்பு

  எதிர்காலம் அழிப்பு

  பேருந்து கட்டணத்திற்கே ரூ.60 மாணவன் செலவழித்துவிடுகிறான். இப்படி இருக்கும் போது நீட் தேர்வு பயிற்சிக்காக ஏழை மாணவன் எப்படி லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்க முடியும். யாரோ கொழுப்பதற்கு தமிழ் பிள்ளைகளின் எதிர்காலத்தை அழிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் கவுதமன் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Director Gautaman slams state and centre for not take necessary steps to get approval from president for NEET exemption draft which is passed in tamilnadu assembly twice.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற