ஊடகவியலாளர்களுக்கு ஒரு சீனியரின் அட்வைஸ்!
- இயக்குநர் கவிதாபாரதி
இது இளையராஜா தொடர்பான பதிவு மட்டுமன்று...
நான் ஊடகத்துறையிலிருந்து வந்தவன்.
இன்னும் அத்துறையின்பால் அளவற்ற ஆர்வமும் மரியாதையும் கொண்டவன்..
அந்த உரிமையில் சில ஆலோசனைகளைச் சொல்ல விரும்புகிறேன்.
முதலில் களத்திலிருந்து செய்திகளை வழங்கும் செய்தியாளர்களுக்கு மொழிப்பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.
சொல்ல நினைக்கும் செய்தியை தடையின்றிச் சொல்ல இயலாமல் வார்த்தைக்கு வார்த்தை வந்து வந்து என்னும் பொருளற்ற இணைப்புச் சொல்லைப்பயன்படுத்தி தடுமாறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

என்னன்னு பாத்தீங்கன்னா, என்னன்னு கேட்டீங்கன்னா என்பது போன்ற முதிர்ச்சியற்ற மொழியில் செய்தி வழங்குவதைத் தவிர்க்கும் விதத்தில் பயிற்சியளிப்பது அவசியம்.
மிக முக்கியமானது யாரிடமிருந்து கருத்தைப் பெற விரும்புகிறார்களோ அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வதைக்கற்றுத் தரவேண்டியது அவசியம்.
எந்த இடத்திலும் ஒலிவாங்கியை நீட்டி, எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்துக் கேட்பது அரசியல்வாதிகளுக்கு உவப்பானதாக இருக்கலாம்.. மற்ற துறை சார்ந்தவர்களிடம் காரணத்தைக்கூறி அவர்கள் அதுபற்றிக் கருத்துக் கூற விரும்பினால் முறைப்படி நேரமும் அனுமதியும் பெற்ற பிறகே ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.
சம்மந்தப்பட்டவருக்கு கருத்துக் கூற விருப்பமில்லையெனில் அது கருத்துக் கேட்கும் நிறுவனத்தை உதாசீனப்படுத்துவதாகக் கருதலாகாது.
Bite shot கெடச்சா நல்லது.. fight shot கெடச்சா அதைவிட நல்லது என்பது ஊடக தர்மமாகாது.
இதைப் பற்றி ஊடகங்கள் தமக்குள் சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு கடைபிடிக்க வேண்டும்.. இல்லையெனில் இதைப் போன்ற பரபரப்பான சூழல்களை உருவாக்குமாறு மற்ற செய்தியாளர்களும் தூண்டப்படுவார்கள்.. இதன் உச்சமாக பரபரப்பான எதிர்மறைச் சம்பவம் உருவாக்கப்படும்போது அதைச் செய்யாத மற்ற செய்தியாளர்கள் நல்ல வாய்ப்பை நழுவ விட்டதற்காக குற்றஞ்சாட்டப்படும் நிலைமையும் உருவாகலாம்.
மற்ற எந்தத் துறையைவிடவும் ஊடகத்துறையின் அறவீழ்ச்சி சமூகத்தை மிக வேகமாக பின்னோக்கியே இட்டுச்செல்லும்.
சத்யமேவ ஜெயதே.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இளையராஜாவை பிறந்தநாளில் சந்தித்த மாரி செல்வராஜ் உருக்கம்.. சிஎம் விஜய் பற்றி ஒரே வார்த்தையில் பதில் -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
83 வயதில் இசைஞானி இளையராஜாவின் காப்பி ரைட்ஸ் போராட்டம்.. இளைஞர்கள் அறிய வேண்டிய பாடம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications