கனமழை எச்சரிக்கை.. தமிழகம் முழுக்க தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை!
கனமழை எச்சரிக்கையை அடுத்து பேரிடர் மீட்பு படை தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளது.
சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து பேரிடர் மீட்பு படை தமிழகத்தில் தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இதனால் தற்போது தமிழகம் முழுக்க பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பயிற்சி பெற்ற வீரர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளனர். நேற்று இவர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தினார்கள். மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ள தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், திருவள்ளூர், ஈரோடு பகுதிகளில் ஒத்திகை நடத்தினார்கள்.
பேரிடர் உதவிகளுக்கு சிறப்பு உதவி எண் 077 என்ற டோல் பிரீ எண் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் எல்லா போலீஸ் நிலையங்களிலும் இதற்காக தனியே போலீசார் ஒருவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பேரிடர் குறித்த புகார்களை கவனிக்க உள்ளார்.
எல்லா மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications