பியூஷ் மனுஷைத் தாக்கிய காவலர்களைப் பணி இடைநீக்கம் செய்க - வைகோ
சென்னை: சேலம் சுற்றுச் சூழல் ஆர்வலர் பியுஷ் மானுசைச் சிறையில் காவலர்கள் தாக்கியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தாக்கிய காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறையினரை கடுமையாக சாடியுள்ளார். மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதும், அறப்போராட்டங்கள் நடத்துவோர் மீது காவல்துறையை ஏவி தாக்குதல் தொடுத்து ஒடுக்க முற்படுவதும் அதிமுக அரசின் வாடிக்கையாகிவிட்டது.
சேலம் மக்கள் குழு அமைப்பைச் சேர்ந்த பியூஷ் மானுஷ் சிறந்த சமூக ஆர்வலராகவும், சுற்றுச் சூழல் பாதுகாவலராகவும் தொண்டாற்றி, சேலம் பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

பியூஷ் மானுஷ்
சேலத்தில் கன்னங்குறிச்சி மூக்கனேரியை சீரமைத்து சுற்றுச் சூழலுக்கு இயைந்த சுற்றுலாத் தலமாக மாற்றி அமைக்கவும், அம்மாபேட்டை குமரகிரி ஏரி, அரிசிப்பாளையம் தெப்பங்குளம் ஆகியவற்றை தூர் வாரி செம்மைப் படுத்தவும் பொதுமக்கள் ஆதரவுடன் அவர் எடுத்த முயற்சிகள் பாரட்டத்தக்கவை ஆகும்.

மக்கள் பிரச்சினை
சுற்றுச் சூழல் ஆர்வலராகவும், சமூகப் போராளியாகவும், மக்கள் பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தது மட்டுமின்றி, போராட்டங்களை நடத்தி சிறைக்குச் சென்றுள்ளார்.

காவல்துறையினர் கோபம்
முகநூலில் தன்னை ஆபாசமாக சித்தரித்ததால், தற்கொலை செய்துகொண்ட சேலம் மாணவி விணுப்பிரியா பிரச்சினையில் காவல்துறையினரின் அலட்சியப்போக்கிற்கு பியூஷ் மானுஷ் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் காவல்துறையினர் அவர் மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

கைதான பியூஷ் மானுஷ்
சேலம் முள்ளுவாடியில், முதன்மையான சாலையில் மாற்றுப் பாதை அமைக்காமல், சாலையைத் துண்டித்து ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை அரசு அதிகாரிகள் தொடங்கியபோது, பியூஷ் மானுஷ் மற்றும் அவரது அமைப்பைச் சேர்ந்த இருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பணி செய்யவிடாமல் தடுத்ததிற்காக காவல்துறையினர் ஜூலை 8ஆம் தேதி அவரைக் கைது செய்து, பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

தாக்கிய காவலர்கள்
சிறையிலிருந்து நேற்று விடுதலையான பியூஷ் மானுஷ், சிறையில் தன்னை முப்பது காவலர்கள் சூழ்ந்துகொண்டு கண்மூடித்தனமாக அடித்துத் துன்புறுத்தியதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார். பாதுகாப்பான இடம் என்று கருதப்படும் சிறைச்சாலையில் காவலர்கள் சூழ்ந்து கொண்டு அவரை குண்டாந்தடியால் இரத்தம் சொட்டச் சொட்ட அடித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பணி இடைநீக்கம் செய்க
பொதுப் பிரச்சினைகளுக்காகப் போராடிய சமூக ஆர்வலரை சிறையில் மிருகத்தனமாக தாக்கிய காவலர்களை பணி இடைநீக்கம் செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக நியாயமான முறையில் குரல் கொடுத்து வரும் பியூஷ் மானுஷ் மீது காவல்துறையினர் தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

காவல்துறை அத்துமீறல்கள்
அறவழிப் போராட்டங்களை அடக்குமுறை மூலம் ஒடுக்குவதற்கு ஜெயலலிதா அரசு காவல்துறையினருக்கு அபிரிதமான அதிகாரத்தை வழங்கி உள்ளதா? என்ற ஐயப்பாடு எழுகிறது. காவல்துறையினரின் இதுபோன்ற அத்துமீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications