For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபைக்குள் நுழையவே முடியாது.. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் குறித்து எம்பி வைத்திலிங்கம்!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் சட்டசபைக்குள் நுழைய முடியாது என அதிமுக எம்பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் சட்டசபைக்குள் நுழைய முடியாது என அதிமுக எம்பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் அண்மையில் தகுதி நீக்கம் செய்தார். எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது அன்றே அரசிதழில் வெளியிடப்பட்டது.

Disqualified MLAs can not enter in the assembly: MP Vaithilingam

சபாநாயகரின் இந்த நடவடிக்கை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜனநாயக படுகொலை என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதி அலுவலகங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்பி வைத்திலிங்கம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வரமுடியாது என தெரிவித்துள்ளார். மீறி சட்டசபைக்குள் நுழைய முயன்றால் காவலர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
MP Vaithilingam said Disqualified MLAs can not enter in the assembly. If they tried to enter in the assembly the securities will not allow them he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X