ஆர்.கே. நகரில் லஞ்சம் கொடுக்கும் தினகரனை தகுதி நீக்கம் செய்க - சசிகலா புஷ்பா
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் தாராளமாக பணப்பட்டுவாடா செய்வதாக பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளன. இதனையடுத்து சிறப்பு பார்வையாளர்கள், சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை முதல் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் வீடுகளில் அதிரடி சோதனையை தொடங்கியது வருமான வரித்துறை. விஜயபாஸ்கர் வீடு, கல்குவாரியில் நடத்திய ரெய்டில் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் டிடிவி தினகரனை ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சசிகலா புஷ்பா கடிதம்
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்குவதாக பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. நேரடியாக, ஓப்பனாக இவர்கள் பணப்பட்டுவாடா செய்வது நன்றாகவே எல்லாருக்கும் தெரிகிறது. அதற்கான ஆதரங்களும் வருகின்றன.

டிடிவி தினகரன் மிரட்டல்
ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வரும் தினகரன் வெளியூர்களில் இருந்து ஆட்களை இறக்கி வாக்காளர்களை தனக்கு வாக்களுக்குமாறு மிரட்டியும் வருகின்றனர். மேலும் காவல்துறையை பயன்படுத்தி மின்னணு வாக்குப்பதி இயந்திரத்தின் மூலம் தங்களுக்கு சாதகமாக ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது.
|
தகுதி நீக்கம் செய்க
பணப்பட்டுவாடா தொடர்பாக தினகரன் தரப்பு மீது 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே நேரடியாக பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ள டிடிவி தினகரனை உடனடியாக காலம் தாழ்த்தாமல் தேர்தலில் போட்டியிட முடியாமல் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வாக்களர்களுக்கு லஞ்சம்
ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சி செய்யும் டிடிவி தினகரனை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சசிகலா புஷ்பா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications