ஜெ. மரணம் முதல் தினகரன் வரை- அத்தனை சர்ச்சை ஃபேஸ்புக் பதிவுகளையும் நீக்கிய திவாகரன் மகன் ஜெயானந்த்!
ஜெயலலிதா மரணம் முதல் தினகரன் வரையிலான சர்ச்சைக்குரிய அத்தனை ஃபேஸ்புக் பதிவுகளையும் ஒரேடியடியாக அழித்திருக்கிறார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
சென்னை: சசிகலா குடும்பத்து ரகசியங்களை போட்டுடைத்து வந்த திவாகரன் மகன் ஜெயானந்த் தம்முடைய அத்தனை ஃபேஸ்புக் பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகவே அழித்துவிட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா குடும்பத்தின் கை அதிமுகவில் ஓங்கியது. அதேநேரத்தில் சசிகலா குடும்பத்தின் அடுத்த தலைமுறையிலும் அரசியல் கோதாவில் குதித்தது.
இதில் சசிகலாவின் தம்பி மகன் திவாகரன், சசிகலாவின் அண்ணன் மறைந்த ஜெயராமன் மகன் விவேக் இருவரும்தான் மல்லுக்கட்டி வந்தனர். திவாகரனுக்காக ஜெயான்ந்தும் தினகரனுக்காக விவேக்கும் களமிறங்கினர்.

எல்லாமும் விவேக்
சசிகலாவோ விவேக்கையே அதிகம் நம்பினார். இந்த விவேக் வசம்தான் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு, ஜாஸ் சினிமாஸ் என சசிகலா குடும்பத்துக்கான வருவாய் மூலமே இருந்து வருகிறது. தற்போது தினகரன் சிறைக்குப் போன நிலையிலும் விவேக்தான் அத்தனையையும் பார்த்து வருகிறார்.

அப்பல்லோ வீடியோ
இதனிடையே ஜெயானந்த் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதா- சசிகலா இருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் உரையாடும் வீடியோ இருக்கிறது. அதை வெளியிடலாமா? என மிரட்டியிருந்தார். இதனை நமது ஒன் இந்தியா தமிழ் தளம் முதன் முதலாக வெளியிட்டிருந்தது. அதன்பின்னர் இது தேசிய ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஜெயானந்த்- விவேக் மோதல்
இதனைத் தொடர்ந்து தினகரனை அதிமுகவினர் ஒதுக்கி வைத்தபோது அதை வரவேற்றிருந்தார் ஜெயானந்த். ஆனால் ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்திலேயே விவேக் இதை கடுமையாக எதிர்த்து மல்லுக்கட்டியிருந்தார். இப்படி ஜெயானந்த்- விவேக் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்து வந்தது.

லீலைகள் அம்பலம்
இதனால் ஜெயானந்த், விவேக் இருவரும் பரபஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் இதுவரை வெளிவராத ரகசியங்களை அம்பலப்படுத்தி வந்தனர். விவேக் சட்டப்படிப்பே படிக்காமல் சட்டம் படித்ததாக ஏமாற்றி வருகிறார் என சொன்னது ஜெயானந்த் தரப்பு. அதேபோல் ஜெயானந்த், பாஸ் என்கிற பாஸ்கரன் மகளை சிறுவயது முதலே காதலித்து வருகிறார்... அவருக்கு திருமணம் நடக்கப் போகிறது... சசிகலா சிறையில் இருக்கும் நிலையில் திருமணம் செய்கிறாரே என கொளுத்திப் போட்டது விவேக் தரப்பு.

திடீர் முடிவு
இந்த நிலையில் ஜெயானந்த் தம்முடைய அத்தனை ஃபேஸ்புக் பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகவே அதிரடியாக நீக்கியிருக்கிறார். அத்துடன் ஜெயானந்த் தலைமையை ஏற்க தயார் என்றெல்லாம் கூவிய அடிப்பொடிகள் ஒருவரை கூட நண்பர்கள் பட்டியலிலும் ஜெயானந்த் வைக்கவில்லை. தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தையே கழுவி சுத்தம் செய்திருக்கிறார் ஜெயானந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications