தினகரனின் சகோதரர் "பாஸ்" மகளுடன் திவாகரன் மகன் 'சர்ச்சை' ஜெயானந்த் விரைவில் திருமணம்?
தினகரனின் சகோதரரான பாஸ் என்கிற பாஸ்கரன் மகளை திவாகரன் மகன் ஜெயானந்த் விரைவில் திருமணம் செய்ய உள்ளாராம்.
சென்னை: என்னதான் ஒதுக்கி வைத்தாலும் அதிமுகவை யார் கபளீகரம் செய்வது என சசிகலா குடும்பமே முட்டி மோதிக் கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ் என்கிற பாஸ்கரின் மகளைத்தான் ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திவாகரன் மகன் ஜெயானந்த் திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவையும் ஆட்சியையும் ஆட்டைய போடுவதற்கு அவரது உறவினர்கள் படாதபாடு பட்டனர். இதில் தினகரனின் கை ஓங்கியது. சசிகலா சொந்தங்களால் பாஸ் என்றழைக்கப்படும் திவாகரனுக்கு இறங்குமுகமானது.

ஜெயானந்த்
தாய்மாமன் திவாகரனின் உத்தரவுகள் எதனையும் நிறைவேற்றக் கூடாது என முதல்வர் எடப்பாடிக்கு தினகரன் உத்தரவெல்லாம் போட்டிருந்தார். இது தொடர்பாக சசிகலாவை சிறையில் சந்தித்து திவாகரன் மகன் ஜெயானந்த் முறையிட்டிருந்தார்.

சர்ச்சை பதிவுகள்
ஆனால் காலத்தின் கோலம் தினகரனையே அமைச்சர்கள் ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். இதனை ஜெயானந்த் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வரவேற்று பதிவைப் போட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதேபோல் அப்பல்லோவில் சசிகலா- ஜெயலலிதா உரையாடும் வீடியோ இருப்பதாகவும் ஜெயானந்த் போட்டது இந்திய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

ஜெயானந்த் திருமணம்
இந்த நிலையில்தான் ஜெயானந்தின் திருமணம் தொடர்பான தகவலும் வெளியாகி உள்ளது. டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ் என்கிற பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீயைத்தான் ஜெயானந்த் நீண்டகாலம் காதலித்து வருகிறாராம். அவரைத்தான் திருமணம் செய்வது தொடர்பாக பேச்சுகள் நடக்கிறதாம்.

சொந்தங்களே நாங்க...
ஆனால் ஜெயானந்தின் தந்தை திவாகரனோ இப்போது வயது 24தான் ஆகிறது.. இன்னும் 2 ஆண்டுகாலம் போகட்டும் என பதில் சொல்லியிருக்கிறார். தற்போதைய நிலையில் என்னதான் அதிகாரத்துக்காக இரண்டு குடும்பங்களும் அடித்துக் கொண்டாலும் சொந்தங்கள் விட்டுப் போகாது என்பதை வெளிப்படுத்தவே இந்த திருமண தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன என்கிறது மன்னார்குடி வட்டாரங்கள்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications