போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை ரிலீஸ் செய்த திவாகரன் மகன் ஜெயானந்த்
போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை இன்று வெளியிட்டார் திவாகரன் மகன் ஜெயானந்த்.
Recommended Video

சென்னை: சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் தாம் தொடங்கியிருக்கும் போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை இன்று வெளியிட்டார்.
தினகரன் தனிக்கட்சி தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில் திவாகரன் மகன் ஜெயானந்த், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் பணியகம் தொடங்குவதாக அறிவித்தார்.

தினகரனின் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனும் தனியே சுற்றுப் பயணம் செய்து அதிமுக தொண்டர்களை சந்திப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தமது அமைப்பு தினகரனுக்கு எதிரானது அல்ல; அவருக்கு ஆதரவானதுதான் என ஜெயானந்த் ஃ பேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
தினகரன் தனிக்கட்சி தொடங்கும்போது அதன் துணை அமைப்புகளில் ஒன்றாக போஸ் மக்கள் பணியகம் இயங்கும் என ஜெயானந்த் தரப்பு விளக்கம் தந்துள்ளது. இதனிடையே இந்த போஸ் மக்கள் பணியகத்தின் லோகோவை இன்று ஜெயானந்த் வெளியிட்டிருக்கிறார்.
போஸ் மக்கள் பணியகம் மூலம் உறவினர்கள், அதிமுகவில் உள்ள ஆதரவாளர்களை ஒன்று திரட்டுகிறார் ஜெயானந்த். ஏற்கனவே தினகரனின் மேலூர், திருச்சி கூட்டங்களுக்கு டெல்டா மாவட்டத்தில் இருந்தே ஆட்கள் திரட்டப்பட்டிருந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications