வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், மயூரநாதர் கோயிலில் பூஜை செய்த திவாகரன்!
வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் திவாகரன் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார்.
திருச்சி: வருமான வரித்துறை அலுவலகத்தில் திவாகரன் ஆஜராகவில்லை. மாறாக மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அவர் சிறப்பு பூஜை செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த சோதனை 5 நாட்கள் நீடித்தது.
1800 அதிகாரிகள் களம் இறங்கி இந்த மெகா சோதனையை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கணக்கில் வராத நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

வருமான வரித்துறை ரெய்டு
சென்னை, மன்னார்குடி, திருச்சி, பெங்களூரு என 190 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. திவாகரனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது.

வருமான வரித்துறை நோட்டிஸ்
இதில் பல முக்கிய சொத்து ஆவணங்களும் பல லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணமும் சிக்கியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு திவாகரனுக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியது.

திவாகரன் ஆஜராகவில்லை
இதைத்தொடர்ந்து அவர் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் திவாகரன் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை.

மயூரநாதர் கோவிலில் பூஜை
அவர் மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது. பூஜையை முடித்த கையோடு விசாரணைக்கு செல்வது உகந்ததல்ல என கூறப்பட்டதால் அவர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

தொடர் சறுக்கல்களால் பூஜை
வருமான வரரித்துறை ரெய்டு மற்றும் கட்சி, ஆட்சி, சின்னம் தொடர்பாக அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் சறுக்கல்களை தொடர்ந்து திவாகரன் மயூராநாதர் கோவிலில் பூஜை செய்ததாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அடுத்த வாரத்தில் திவாகரன் ஆஜராகி விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications