புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளிக் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை : தீப ஒளித் திருவிழாவை முன்னிட்டு மக்கள் வீடுகளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.
தீபாவளிப் பண்டிகை தமிழகம் மற்றும் புதுவையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து மக்கள் இறைவழிப்பாடு நடத்தினர். பெரியவர்களின் காலில் விழுந்து புத்தாடையை வாங்கி அணிந்து கொண்டு குதூகலத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

வாசலில் வண்ணக் கோலங்கள் முதல் தோரண அலங்காரம் என வீடுகளில் விழாக் கோலம் களைகட்டியது. இதே போன்று அதிகாலையில் வாசலில் தீபங்கள் வரிசையாக ஏற்றி வைத்து தீபாவளிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications