மக்களே தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? நாளைக்கு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்!

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. இதன்காரணமாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

Diwali festival train tickets reservation starts tomorrow morning

சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் என அரசு எத்தனை ஏற்பாடு செய்தாலும் கூட்டம் குறையாது.
இந்நிலையில் பொதுமக்களின் வசதி கருதி 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை ) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரெயில்களில் வெளியூர் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2-ம் தேதி பயணம் செய்யும் பயணிகள் நாளை முன்பதிவு செய்யலாம். தீபாவளிக்கு முந்தைய வாரம் வெள்ளிக்கிழமையில் (நவம்பர் 2) இருந்தே பலர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள். இதனால் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 3-ம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர் ஜூலை 6-ம் தேதி, நவம்பர் 4-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் செல்பவர்கள் ஜூன் 7-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+