தீபாவளிக்கு ரஜினி, கமலுக்கு 'இலவச வேட்டி சட்டை'... அப்படின்னா ஜெயலலிதாவுக்கு?
நடிகர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்த பிறகு விஷால் - நாசர் அன்ட் நடத்தும் கூத்துக்களைப் பார்த்தால் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால்...' வழக்குச் சொல்தான் நினைவுக்கு வருகிறது.
இந்த புதிய அணியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்பது, புதிய நிர்வாகிகளின் பிரஸ்மீட்டியே தெரிந்துவிட்டது.
அதை உறுதிப்படுத்துவது போல இப்போது ஒரு அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள்.

'தீபாவளியை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல் உட்பட அனைவருக்கும் அனைவருக்கும் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்கு சேலையும் இதனுடன் உறுப்பினர்களுக்கு ஒரு பை இனிப்பும் வழங்கப்படவுள்ளது. இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் உறுப்பினர்களின் வீட்டிற்க்கே சென்றடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாடகக் கலைஞர்களைக் கணக்கெடுத்து அவர்களுக்கும் இந்தப் பரிசு சேர ஏற்பாடு நடக்கிறது!'
-இதுதான் அந்த அறிவிப்பு.
ஒவ்வொரு தீபாவளிக்கும் தனது ஏரியாவில் இருக்கும் காவல் துறையினர், மின் வாரிய ஊழியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானவர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பரிசு கொடுப்பவர் ரஜினிகாந்த். அவருக்கு தீபாவளியையொட்டி இலவச வேட்டி-சேலை தரப் போவதாக அறிவித்திருப்பது எந்த வகை நாகரீகம் என்று தெரியவில்லை.
இந்தப் பரிசுக்காகக் காத்திருப்பவர் அல்ல கமல் ஹாஸன். இந்த இரு சாதனையாளர்களையும் பெரிய அளவில் மரியாதை செய்து கவுரவிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தது விஷால் அன்ட் கோ. இதுதான் அந்த 'மரியாதை'யின் ஆரம்பம் போலி்ருக்கிறது.
ஒரு சங்கம், அல்லது யூனியன் என்று இருந்தால் பரிசுப் பொருள்கள் தருவதெல்லாம் வழக்கமானதுதான். ஆனால் அதை யாருக்குத் தருவதாக அறிவிப்பதென்ற விவஸ்தை வேண்டாம்?
அப்படியென்றால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நடிகர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். அவருக்கு இலவச சேலையும் இனிப்பு பொட்டலமும் தருவார்களா விஷால் அண்ட் கோ? அதைச் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
நலிந்த நாடகக் கலைஞர்கள், நடிகர் - நடிகைகளுக்குத் தரப் போகிறோம் என்று பொதுவாக அறிவித்திருந்தால், அதில் ஒரு நாகரீகம் இருக்கிறது.
ஆனால் இந்த 'ரஜினி, கமலுக்கு இலவச வேட்டி சேலை' அறிவிப்பு எந்த வகையில் சேர்த்தி?
முதல் கோணல் முற்றிலும் கோணலாகப் போகிறதோ!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications