ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்கிறது தேமுதிக?
சென்னை: லோக்சபா தேர்தலில் புதிய திருப்பமாக தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.
உளுந்தூர்பேட்டையில் பிப்ரவரி 2-ந் தேதி தேமுதிகவின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில்தான் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்திருக்கிறார்.
கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்கையில், என் மனதுக்குள் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.. யாரும் எதிர்பார்க்காத வியூகம் அது.. என்று பூடகமாகவே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசி வருகிறார். இந்நிலையில் தேமுதிகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று திமுக அறிவித்த கையோடு ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது.

ஊழலை ஒழிப்போம் வாசகம்
இதனிடையே தேமுதிகவின் மாநில மாநாடுக்கான முழக்கமாக "ஊழலை ஒழிப்போம்" என்ற வாசகம் பிரதானமாக இடம் பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களை ஆச்சரியப்படுத்தியிருப்பதுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

ஆம் ஆத்மியுடன் கூட்டணி?
விஜயகாந்த் கூறிவருவது போல யாரும் எதிர்பார்க்காத வகையில், ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

என்ன லாபம்?
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்க்க முடியும், பெருவாரியான தொகுதிகளில் போட்டியிட முடியும் என்றும் தேமுதிக கருதுவதாக தெரிகிறது.

புதிய முழக்கம்
மேலும் ஊழல் கட்சிகளுடனும், மதவாத கட்சிகளுடனும் தேமுதிக எப்போதும் கூட்டணி வைக்காது என்ற புதிய முழக்கத்தை அக்கட்சி முன்வைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

பிரபல நடிகர் ஆதரவு?
விஜயகாந்த் அமைக்க உள்ள இக்கூட்டணிக்கு தமிழ் திரைப்பட துறையின் முக்கிய நடிகர் ஒருவரும் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications