ஒருதலைபட்சமாக வேட்பாளரை விஜயகாந்த் அறிவித்ததால் குழப்பம்- தமிழக பாஜக பொறுப்பாளர் சாடல்
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சாடியுள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையிலான அணியில் இடம்பெறுவது குறித்து தேமுதிக, பாமக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் சில தொகுதிகளுக்காக இந்த பேச்சுவார்த்தையில் பெரும் இழுபறி ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திடீரென முதல் கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். வேட்பாளர்களை ஒருதலைபட்சமாக அறிவித்த கையோடு பிரசாரத்தையும் அவர் தொடங்கிவிட்டார்.
இது பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து நேற்று இரவு பாஜக தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவதற்கு முன் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. தே.மு.தி.க.வுடன் சில தொகுதிகள் குறித்து பேச்சு நடந்து வருகிறது. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த முடிவை அகில இந்திய தலைவர் தான் அறிவிப்பார் என்றார்.
இதனிடையே பா.ஜ.க.வினர் நேற்று இரவு தே.மு.தி.க. தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications