தேமுதிக நேர்காணல் பிப்ரவரி 22 முதல் மார்ச் 1 வரை நடைபெறும் - விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: தேமுதிக சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் வருகிற 22ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல்,22.02.2016 முதல் 01.03.2016 வரை ஒன்பது நாட்கள் தினசரி காலை 9 மணி முதல் கழக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தலைமை கழகத்தில் நடைபெற இருக்கின்றது.

எனவே, விருப்பமனு அளித்துள்ளவர்கள் தாங்கள் எந்த மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிக்கு விருப்பமனு அளித்துள்ளீர்களோ, அந்த மாவட்டத்திற்கான நேர்காணல் நடைபெறும் தேதியில் வருகை தந்து நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
வரும்பொழுது, கழக உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, தாங்கள் கல்வி சான்றிதழ், தனித் தொகுதிக்கு தேவையான ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசல் (ORIGINAL)சான்றிதழ்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். கீழ்க்கண்ட அட்டவணைப்படி குறிப்பிட்ட தேதிகளில்,கீழ்க்கண்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் தேதி விவரம்:
பிப்ரவரி 22 திங்கள்கிழமை -:திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி
பிப்ரவரி 23 செவ்வாய்கிழமை -தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, விழுப்புரம்
பிப்ரவரி 24 புதன்கிழமை - மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை
பிப்ரவரி 25 வியாழக்கிழமை - சிவகங்கை,தேனி,திண்டுக்கல்,கரூர்,பெரம்பலூர், அரியலூர், மேற்கு சென்னை
பிப்ரவரி 26 வெள்ளிக்கிழமை - கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு
பிப்ரவரி 27 சனிக்கிழமை - நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம்
பிப்ரவரி 28 ஞாயிற்றுக்கிழமை - நாமக்கல், சேலம், கடலூர்
பிப்ரவரி 29 திங்கள்கிழமை - திருச்சிராப்பள்ளி,வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை
மார்ச் 1 செவ்வாய்கிழமை - தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், புதுச்சேரி
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications