பாஜக கூட்டணியில்தான் விஜயகாந்த் இருக்கிறார்: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: பாஜக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில், தேமுதிகவின் நடவடிக்கைகளால் அக்கட்சி பாஜக கூட்டணியில் தான் இருக்கிறதா என்ற சந்தேகம் தொடர்ந்து நிலவுகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் திட்டங்களால் இந்தியா வளர்ச்சி அடையும். அப்போது தமிழகமும் தலைசிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்பது அனைவரின் ஆசை.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ. தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். விஜயகாந்த் எங்கள் கூட்டணியில் தான் உள்ளார்' என்றார்.
மேலும், ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரைத்தான் கேட்கிறோம். இதை தர மறுப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்துக்கு தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீரை தரவேண்டும். இதை ஆணையாக பிறப்பிக்கும் சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது' என அவர் தெரிவித்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications