பிடிவாரண்ட் எச்சரிக்கை: விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார் விஜயகாந்த்

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த தே.மு.தி.க பொது கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது அரசு வழக்கறிஞர் பொன்.சிவா விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு முறை ஆஜரான விஜயகாந்த், அதன் பிறகு தொடர்ந்து ஐந்து முறை ஆஜராகாமல் வாய்தா வாங்கினார்.
கடந்த மாதம் 25ஆம் தேதி நடந்த விசாரணையின் போது தொடர்ந்து ஆஜராகாத விஜயகாந்த்க்கு ஜாமீனுடன் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கவும், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யவும் ரிஷிவந்தியம் புறப்பட்டு சென்றார் விஜயகாந்த்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு எப்பொழுதாவது தலைகாட்டும் விஜயகாந்த், அவதூறு வழக்கில் ஆஜராக விழுப்புரம் வரும்பொழுது தனது தொகுதியையும் எட்டிப்பார்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications