தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்..
நடிகரும், தேமுதிக தலைவருமாக விஜயகாந்த் அவ்வப்போது உடல்நிலை குறைபாடு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வது வழக்கம். அதன்படி சமீபத்தில் அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துவிட்டு நாடு திரும்பிய நிலையில், ஓரிரு நாட்களிலேயே மீண்டும் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
[ ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க.. கல்லூரி மாணவி பேஸ்புக் லைவ்வில் தற்கொலை முயற்சி ]

பிறந்த நாள்விழா
பின்னர் இரண்டு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த்துக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விஜயகாந்த் பிறந்தநாள் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அறிக்கைகள்
சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் விஜயகாந்த் இருந்தாலும், அவ்வப்போது அரசியல் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு தேமுதிக சார்பான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

மீண்டும் அமெரிக்கா?
கடந்த சில நாட்களுக்கு முன்புகூட சர்வதேச சாதனையாளர் விருது பெற்ற நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். என்றாலும் விஜயகாந்த் மீண்டும் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

வழக்கமான பரிசோதனை
இந்நிலையில், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் இன்று காலை அனுமதிக்கப்பட்டர். வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் விஜயகாந்த் உள்ளதால் இன்றே வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மாலை விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications