மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு- மதுரையில் டிச. 19-ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரையில் தனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு மின் கட்டணத்தை 15% உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மின்கட்டண உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் வரும் 17-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 19-ந் தேதியன்று மதுரையில் தமது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications