அம்மா ஆட்சி என்று அக்கப்போர் அடிக்கிறார்கள் - அரசை வெளுத்து வாங்கிய விஜயகாந்த்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்
சிவகாசி: அம்மா வழியில் ஆட்சி என்று ஆட்சியாளர்கள் அக்கப்போர் அடிக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கோரி சிவகாசி பாவடிதோப்பு திடலில் இன்று விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.வினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுச்சூழல்விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்குஅளிக்க வேண்டும், பட்டாசு தடை தொடர்பானசுப்ரீம் கோர்ட்டு வழக்கை விரைந்து விசாரிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.

சிவகாசியில் பாதிப்பு
ஆலைகள் மூடப்பட்டதால் பட்டாசு மற்றும்அதன் உபதொழிலை நம்பி இருக்கும் 10 லட்சத்திற்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ரயில் மறியல் போன்றபோராட்டங்கள் நடந்தன. தற்போது வேலை நிறுத்தம் வாபசாகிஉள்ளது. நாளை முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

விஜயகாந்த் ஆர்பாட்டம்
பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கோரி சிவகாசி பாவடிதோப்பு திடலில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் இந்த போராட்டத்திற்கு தலைமைதாங்கினார். இதில் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பட்டாசுதொழிலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

லஞ்ச ஊழல்
விழாவில் பேசிய விஜயகாந்த், 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அம்மா ஆட்சி என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அக்கப்போர் அடிப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றஞ்சாட்டினார்.

ராஜேந்திர பாலாஜி
மேலும் இந்த நிலைக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார். கேடி என்று ராஜேந்திரபாலாஜியை கிண்டலடித்த விஜயகாந்த், தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications