பண்ருட்டியில் மீண்டும் வேலையை காண்பித்த விஜயகாந்த்! தொண்டருக்கு 'பளார்'!!
கடலூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தொண்டரை அவரது மனைவி, குழந்தைகள் முன் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பரபரப்பான பல காட்சிகள் தினம் அரங்கேறி வரும் நிலையில், தேமுதிக உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியை நடத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கும் . இறுதியில் கட்சித் தொண்டர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

பதற்றமில்லாமல் பண்ருட்டி வந்த விஜயகாந்த்
நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. சிதம்பரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பண்ருட்டி காடாம்புலியூரில் ஒரு திருமண மண்டபத்தில் 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் வந்தார்.

விஜயகாந்த் கோபம்
அங்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமிருந்தது. அவர்கள் தலைவர் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். அதனால் முண்டியடித்துச் சென்றார்கள். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிர்ச்சியில் விஜயகாந்த்
கூட்டத்தை ஒழுங்கப்படுத்தச் சொல்லிவிட்டு, விஜயகாந்ந், அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்ததும் அப்போதும் மேடை மேல் நிறைய தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் அப்போது இல்லை.

அடிவாங்கிய தொண்டரின் சிரித்த முகம்
இதனால், மீண்டும் அவர் அறைக்குள் சென்றார். பிறகு, கூட்ட்டத்தை ஓரளவு நிர்வாகிகள் கட்டுப்படுத்தினர். அதன்பிறகு, மேடையில் தொண்டர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது, திடீரென ஒரு தொண்டரை அடித்தார். அடித்த சில நிமிடங்களிலேயே அந்த தொண்டருடன் சிரித்துப் பேசினார். தொண்டரும் அடிவாங்கியதை மறந்து சிரித்துப் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.

தலைவர் இன்னும் ஹீரோதான்
தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளரை அடித்த சம்பவம் நினைவிருக்கலாம். செய்தியாளர் சந்திப்பின்போது, 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ' என்று விஜயகாந்த் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியதுண்டு. 'தலைவர் சினிமாவில் ஸ்டண்ட் மேன்களை அடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்' என அவரது தொண்டர்கள் இதை காமெடியாக நினைத்துக்கொள்கிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications