போச்சு மொத்தமா போச்சு.. 14 தொகுதிகளை சண்டை போட்டு வாங்கி போண்டியான தேமுதிக!
சென்னை: பாஜகவிடம் அணத்தி தொணத்தி சண்டை போட்டு முறைத்து, விறைத்து பெற்ற 14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெல்ல முடியாமல் போயுள்ளது.
பெரும் மிதப்பில் இருந்து வந்த தேமுதிகவினருக்கு இந்த எதிர்பாராத முட்டைத் தோல்வி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதை சத்தியமாக தேமுதிகவினர் எதிர்பார்க்கவில்லை.

சேலத்தில் மச்சானுக்கு வச்ச ஆப்பு
சேலம் தொகுதிதான் தேமுதிகவுக்கு கிடைத்த பெரும் ஆப்பாக மாறியுள்ளது. இந்தத் தொகுதியைப் பெறத்தான் எத்தனை சண்டை.. எத்தனை மோதல்.. அத்தனையும் இப்போது போண்டி. விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷுக்கு இங்கு அதிமுக ஆப்பு வைத்து விட்டது.

எல்லா இடத்திலும் மோசம்
எல்லா இடத்திலுமே தேமுதிக தோல்வியைத் தழுவுகிறது. சில இடங்களில் அவர்களுக்கு டெபாசிட் கிடைக்குமா என்பது கூட எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

இது வேண்டும்... அது வேண்டும்...
நாங்கதான் பெரிய கட்சி, எங்களுக்குத்தான் நிறைய சீட், அது வேண்டும், இது வேண்டும், இந்த தொகுதிகள்தான் தேவை.. இதெல்லாம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற அடம் பிடித்து அநியாயம் செய்த தேமுதிகவுக்கு இப்போது அதிர்ச்சி நேரம்.

எங்குமே இல்லை
கேட்டு வாங்கிய 14 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட தேமுதிக வெல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எங்குமே அது முன்னிலையில் இல்லை.

விஜயகாந்த் கேட்ட தொகுதிகளில்தான் மோசம்
விஜயகாந்த் வலியுறுத்திப் பெற்ற தொகுதிகளில்தான் தேமுதிக தோல்வியுறும் நிலை காணப்படுவது தேமுதிகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஆட்டமான ஆட்டம்
கட்சி காலியாகி ரொம்ப நாளாகி விட்டது என்று பலரும் கூறியும் கூட அதை நம்பாமல் தனக்கு அத்தனை பலமும் அப்படியே இருக்கிறது என்று நாக்கை மடித்தும், கையை ஆட்டியும், கோபப்பட்டும் கூறி வந்த விஜயகாந்த்துக்கு, தேமுதிக கூடாரம் காலியாகி விட்டதை இந்தத் தேர்தல் முடிவு காட்டியுள்ளது.

அதீத நம்பிக்கை
பாஜகவை இவர்கள் படுத்திய பாட்டை இப்போது நினைத்தாலும் கண்ணில் வியர்க்கும். அப்படி ஒரு அழிச்சாட்டியம். விஜயகாந்த் மட்டுமல்லாமல் அவரது மனைவி, மச்சான் ஆகியோர்தான் கட்சியை நடத்தி வந்தவர்கள். அவர்கள் சொல்படிதான் விஜயகாந்த்தும் கேட்டு செயல்பட்டு வந்தார். இதெல்லாம் மக்களிடையே அவர்களது கட்சி குடும்பக் கட்சி, குடும்ப ஆதிக்கம் மிகுந்த கட்சி என்ற அவப் பெயரை ஏற்படுத்தி விட்டது.

பண்ருட்டியார் விலகல் -- முக்கிய தாக்கம்
கட்சியிலிருந்து பலர் வெளியேறிய போதும் கூட தேமுதிகவின் பிறப்புக்கு முக்கியக் காரணமாக, வழிகாட்டியாக அமைந்தவரான பண்ருட்டி ராமச்சந்திரனே கட்சியை விட்டுப் போனதுதான் தேமுதிக மீதான மக்களின் பார்வையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தன்னிச்சை.. அவசரக்குடுக்கை.. கோபம்..
தன்னிச்சையான முடிவுகள், அவசரக்குடுக்கைத்தனம், கோபாவேசம் ஆகிய விஜயகாந்த்தின் குணாதிசயங்கள்.. எல்லாமே தேமுதிகவின் பெரும் தோல்விக்க முக்கியக் காரணங்கள் என்று கூறலாம்.

அம்மா இல்லைன்னா.. சும்மா....!
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்ததால்தான் விஜயகாந்த்துக்கும், தேமுதிகவுக்கும் இந்த ஏற்றம் கிடைத்தது என்பதை இந்த தேர்தல் மூலம் விஜயகாந்த்தும், தேமுதிகவுமே நிரூபித்து விட்டனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications