அதிமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ
கடலூர்: தேமுதிக எம்.எல்.ஏ தமிழழகன் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் தமிழழகன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். தனது காரில் அ.தி.மு.க. கட்சி கொடியை பறக்க விட்டுள்ளார். அ.தி.மு.க. கரை போட்ட வேட்டி கட்டி உள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்தாலும் இவர் இதுவரை தே.மு.தி.க.வில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்படவில்லை. இந்த நிலையில் பெண்ணாடத்தில் உள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் அ.தி.மு.க. அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அந்த அரங்கத்துக்கு வந்த தமிழழகன் எம்.எல்.ஏ. நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் பொறுப்பாளரிடம் அவர் மனுவை ஒப்படைத்தார். இதனைப் பார்த்த அதிமுகவினர் ஆச்சரியமடைந்தனர்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏவான தமிழழகன் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications