"தேமுதிக புரட்சிப் படை" திடீர் மாயம்... ஆனால் மறுபடியும் "ரீ விசிட்"... உற்சாகத்தில் "ரசிகர்கள்"!
சென்னை: உலகத் தமிழர்களை கலக்கி வந்த தேமுதிக புரட்சிப் படை என்ற பேஸ்புக் குழு திடீரென காணாமல் போனாத்ல அதை விரும்பிப் படித்து வந்த பலரும் ஏமாந்து போயினர். ஆனால் தற்போது அந்த படை மறுபடியும் கிளம்பி வந்துள்ளது.
தேமுதிகவையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் தொடர்ந்து கிண்டலடித்து வந்தது இந்த பேஸ்புக் குழு.
இந்த குழுவின் பக்கத்தில் இடம் பெற்ற பதிவுகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால் லைக் போடுவோர் கூட்டம் அலை மோதியது. ஏகப்பட்ட பேர் தங்களது பதில் கமெண்டுகளால் வேறு கலக்கி வந்தனர். இந்த நிலையில் தேமுதிக புரட்சிப் படையை திடீரென பேஸ்புக்கில் பார்க்க முடியவில்லை. இதனால் பலரும் குழம்பினர். ஆனால் தற்போது அது மறுபடியும் வந்துள்ளது.

நாராயணா.. கோவிந்தா...
விஜயகாந்த்தை இப்படியெல்லாம் கிண்டலடிக்கிறார்களே என்று பலரும் ஆச்சரியப்பட்டு பார்த்த குழுதான் இந்த தேமுதிக புரட்சிப் படை.

புகழ்வது போல இகழ்ச்சி...
விஜயகாந்த்தைப் புகழ்வது போல இதில் அவரை கிண்டலடித்து ஸ்டேட்டஸ் போட்டு வந்தனர். அந்தப் பதிவுகள் வயிறு வலிக்கச் சிரிக்க வைப்பதாக அமைந்தது.

சீரியஸாகவே ஒரு காமெடி
மிக மிக சீரியஸாக எழுதுவது போல எழுதி விஜயகாந்த்தை மறைமுகமாக நக்கலடித்து வந்தனர்.

இதுல மந்திரம் வேற...
அதை விட காமெடி என்னவென்றால் விஜயகாந்த்தைத் துதிக்கும் மந்திரம் என்று வேறு எதையோ போட்டு அவர்கள் செய்த அட்டுத்தனமான குசும்புதான்.

திடீர் மாயம்
இந்த நிலையில் இந்த புரட்சிப்படையை திடீரென பார்க்க முடியவில்லை. அதை பேஸ்புக்கிலிருந்து நீக்கி விட்டதாக கூறப்பட்டது.

புகார் மேல் புகார்
தேமுதிக தரப்பிலிருந்து பேஸ் புக் நிறுவனத்திற்கு இந்த குழு குறித்து புகார்கள் மேல் புகார்கள் போனதால் அந்தப் பக்கத்தையே நீக்கி விட்டதாக சொன்னார்ள்.

எழுத்துப் பிழை..
சமீபத்தில் இந்த பேஸ்புக் பக்கத்தில் மதுவிலக்குப் போராட்டம் என்பதற்குப் பதில் மாதவிலக்கு என்று விஜயகாந்த் படத்தைப் போட்டு ஸ்டேட்டஸ் போட்டிருந்தனராம். இதுவும் தேமுதிக தரப்பு கொந்தளிக்க ஒரு முக்கியக் காரணம் என்றார்கள்.

மீண்டும் வந்தது
ஆனால் புரட்சிப் படை அழியவில்லையாம். மீண்டும் வந்து வி்ட்டது. சற்றும் சளைக்காமல் அதே பாணி கருத்துக்களோடு காமெடியில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.

லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்
தற்போது அவர்கள் சின்ன இடைவெளிக்குப் பிறகு போட்டு வரும் ஸ்டேட்டஸ்கள் படு ரகளையாக இருக்கிறது.
தேமுதிக தரப்பில் சீக்கிரமே சீரியஸாக நடவடிக்கை எடுத்தால் நல்லதுதான்... !
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications