போகுமிடமெல்லாம் "தூ தூ"... "தேடல்" மாநாட்டில் சிறப்பிடம்.. தேமுதிகவின் திடீர் பத்திரிகையாளர் பாசம்!
சென்னை: பத்திரிகையாளர்களை தேமுதிக எந்த அளவுக்கு மதித்து நடத்தும் என்பதை பத்திரிகையாளர்களை விட தேமுதிகவினரே நன்கு அறிவார்கள். இந்த நிலையில் அந்த "வரலாற்றுக்கு" முற்றிலும் முரணாக தேமுதிகவின் வேடல் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு மேடைக்கு முன்பு சிறப்பு இடம் கொடுத்து சிறப்பாக செய்தி சேகரிக்க சிறப்பு வசதிகள் செய்துள்ளதாக தேமுதிக கூறியுள்ளது பத்திரிகையாளர்களுக்கே ஒரு செய்தியாகும்.
அரசியல் ரீதியாக எந்தக் கேள்வி கேட்டாலும் நேரடியாக பதிலளிக்க முன்வராதவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். நியாயமான கேள்விகளுக்கும் கூட நேரடியாக பதில் தர மறுப்பார். தொடர்ந்து கேள்விகள் கேட்டால் கோபமடைந்து விடுவார். ஆக்ரோஷமாக பேசுவார், திட்டுவார்.. உச்சமாக சமீபத்தில் காரி உமிழ்ந்தார்.
பத்திரிகையாளர்களுக்கும் தேமுதிகவினருக்கும் இடையிலான உறவு என்பது நீரும், நெருப்புமாகவே உள்ளது. இந்த நிலையில் வேடல் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக தேமுதிக கூறியுள்ளது.

முதல் வரிசையில் இடம்
இதுதொடர்பாக தேமுதிக விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வேடல் மாநாட்டுக்கு வரும் பத்திரிகையாளர்கள் சிறப்பான முறையில் செய்தி சேகரிக்க மேடையில் முன்புறம் தனி இடம் ஒதுக்கி சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரும் கார்களுக்கு சிறப்பு ஐடியும் தரப்பட்டுள்ளது. எல்லாம் அவர்கள் சிறப்பான முறையில் செய்தி சேகரிக்கவே என்று கூறியுள்ளது தேமுதிக.

ஏன் இந்தத் திடீர் பாசம்
ஆனால் தேமுதிகவின் இந்த திடீர் பாசம்தான் பல கேள்விகளை எழுப்புகிறது. காரணம், அவர்கள் இதற்கு முன்பு நடந்து கொண்ட விதம் அப்படி.

விமான நிலையத்தில் கோபம்
2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகா்த்திடம், ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டபோது ஆத்திரமடைந்தார் விஜயகாந்த். தனது மனைவி பிரேமலதா அமைதிப்படுத்த முயன்றும் கூட அடங்காமல், உன் பத்திரிகையாடா எனக்கு சம்பளமாடா தருது, நாயி என்று அன்போடு பேசி அழகாக நடந்து சென்றார்.

டெல்லியில் டபுள் அட்டாக்
பின்னர் 2015 ஏப்ரலில் டெல்லியில் விமான நிலையத்தில் தன்னிடம் கேள்வி கேட்க முற்பட்ட ஒரு செய்தியாளரிடம் உனக்குப் பேட்டி கொடுக்கணும்கிற அவசியம் எனக்குக் கிடையாது; பட்டுப் பட்டுனு பேசிருவேன் போய்யா... என்றார். அதே நாளில் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கம்முனு இருக்க மாட்டியா... தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க என்றபடி இருக்கையை விட்டு எழுந்து செய்தியாளரை அடிக்க எத்தனித்தார். பின்னர் அவராக வெளிநடப்பு செய்தார்.

தூ...!
அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி சென்னை விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் காரித் துப்பினார்.

மிரட்டல் விடுத்த தேமுதிக எம்.எல்.ஏ
இந்த சம்பவத்திற்குப் பின்னர் சேலத்தில் நடந்த தேமுதிக போராட்டத்தின்போது பேசிய தேமுதிக எம்.எல்.ஏ விருகம்பாக்கம் பார்த்தசாரதி, என் தலைவனை எந்தப் பத்திரிகையாளராவது இனி விமர்சித்தால் வீடு புகுந்து அடிப்பேன் என்று வெறித்தனமாக பேசி ரணகளப்படுத்தினார்.

பார்த்தசாரதியின் இன்னொரு தாக்குதல்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் பாலு என்பவரை அனகாபுத்தூர் முருகேசன் தள்ளி விட்டு தாக்க முயன்று அது தொடர்பாக கைதும் செய்யப்பட்டார்.

விரட்டி விரட்டித் தாக்கிய தேமுதிகவினர்
விஜயகாந்த்தின் தூ பேச்சைக் கண்டித்து சென்னையில் அவரது வீட்டை முற்றுகையிட்டு்ப் போராட்டம் நடத்த முயன்ற பத்திரிகையாளர்களை விருகம்பாக்கம் பார்த்தாசாரதி தலைமையிலான தேமுதிகவினர் ஓட ஓட விரட்டி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் பொதுக் கூட்டத்தில் கேவலப்படுத்தினர்
லேட்டஸ்டாக ஜனவரி 9ம் தேதி பெரம்பலூரில் நடந்த கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்திற்கு பத்திரிகையாளர்களை வருக வருக என்று அழைத்து விட்டு உட்காரக் கூட இடம் தரவில்லை. சேர் தரவில்லை. அவமானப்படுத்தினர்.

இன்னும் இன்னும்
இப்படி விஜயகாந்ததும், அவரது கட்சியினரும் செய்தியாளர்களை காலம் காலமாக மதித்தே நடத்தி வந்துள்ளனர் என்பதே வரலாறு ஆகும். ஆனால் இதைப் போய் விஜயகாந்த்திடம் கேட்க முடியுமா.. கேட்டால் அடிச்சாலும் அடிப்பார்.. துப்புனாலும் துப்புவார்.. தேமுதிகவினரும், விஜயகாந்த்தும் நடந்து கொண்ட விதம் குறித்த செயல்களின் தொகுப்பை இதில் போய்ப் பார்க்கலாம்.

வேடலில் மட்டும் பாசம் ஏன்?
இந்த நிலையில் "தேடல்" மாநாட்டில் (உண்மையில் எந்தக் கூட்டணியில் போய்ச் சேருவது என்ற "தேடல்" மாநாடுதான் இது) மட்டும் பத்திரிகையாளர்களுக்கு முதல் வரிசையில் இடம், சிறப்பு வசதிகள் என அறிவித்துள்ளது தேமுதிக. இதுதான் ஆச்சரியத்துடன் கேள்விகளையும் எழுப்புகிறது. எல்லாம் தேர்தல் வரும் நேரத்தில் எதுக்கு வம்பு என்ற பயம்தான் காரணம் என்று தெரிகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications