தேர்தல் நிதி ரூ. 100 கோடியை தேமுதிக திருப்பித் தரவேண்டும் : மாஜி மா.செ தினேஷ்
சென்னை: திமுகவில் இணைந்த கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ், தேர்தல் பணிக்காக தான் வழங்கிய நிதியை தேமுதிக திருப்பி தர வேண்டும் என கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இது தேமுதிகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதிருப்தியில் உள்ள தேமுதிக நிர்வாகிகளை இழுக்கும் முயற்றியில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் தினேஷ் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர்.

கருணாநிதியிடம் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள், அதிமுக, பாமக என பல கட்சி நிர்வாகிகளும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். திமுகவில் இணைந்த தேமுதிக செயலாளர் திரு.தினேஷ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்செயலாளர் திரு.ஜெயசிங் ஆகியோர் கோபாலபுரத்திற்குச் சென்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தினேஷ் குற்றச்சாட்டு
செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், அதிமுகவிற்கு சாதகமாக செயல்பட்டு வரும் மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது தேமுதிக தொண்டர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேமுதிக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்களின் கருத்துக்கு மாறாக கேப்டன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ரூ. 100 கோடி நிதி
அதிமுகவால் அதிகம் பாதிக்கப்பட்டது தேமுதிக தொண்டர்கள் தன். என் மீது 7 வழக்குகள் உள்ளன. திமுக-வுடன் தான் தேமுதிக தேர்தல் கூட்டணி சேரும் என தேர்தல் நிதியாக 234 தொகுதிகளுக்கும் ரூ.100 கோடி வரை நிதி செலுத்தினோம்.

பணத்திற்கு விலை போனோமா?
தற்போது, நாங்கள் பணத்துக்கு விலை போனதாக பிரேமலதா ஆவேசத்தில் பேசுகிறார். நாங்கள் பணத்துக்காக விலை போகவில்லை. எங்கள் பணம்தான் தேமுதிகவில் உள்ளது. உழைப்புக்கும், கருத்துக்கும் மரியாதை இல்லாத காரணத்தால் திமுகவில் இணைந்தோம் என்று தினேஷ் கூறியுள்ளார்.
தேமுதிகவில் இருந்து விலகிய தினேசும், யுவராஜூம் கட்சித்தலைமை மீது பரபரப்புக் குற்றச்சாட்டை கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications