எங்களுக்கு வாக்களித்த டெல்லி தமிழர்களுக்கு நன்றி: தேமுதிக

இது குறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இருந்து டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட முதல் கட்சி என்பதை தேமுதிக நிரூபித்துள்ளது. டெல்லி வாழ் தமிழர்களுக்கு குரல் கொடுக்கவும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் உத்திரவாதம் ஏற்படுத்திடவும் தேமுதிக இத்தேர்தலில் களம் இறங்கியது.
இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தங்களது பணபலம், ஆட்சி அதிகார பலம் மூலம் எத்தனையோ அச்சுறுத்தல்களை தந்தாலும் எதற்கும் அஞ்சாமல் உறுதியோடு இந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் தேமுதிக தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
இத்தனை ஆண்டுகளும் பெரும் செல்வந்தர்கள் வேட்பாளர்களாக வலம் வரும்போது தூரத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதும் தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போடுவதையும் தவிர எதையும் அறியாமல் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த நம் தமிழர்களுக்கு அவர்களும் தேர்தலில் போட்டி போடலாம். மற்றவர்களுக்கு இணையாக தாங்களும் வேட்பாளர்களாக ஆக முடியும் என்பதை தேமுதிக நிரூபித்ததோடு டெல்லி வாழ் ஏழை தமிழர்களிடையே நம்பிக்கையும், உறுதியையும் அசைக்க முடியாத தைரியத்தையும் தேமுதிக ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
கேப்டனோடு இணைந்து தேர்தல் பணிக்கு வந்திருந்து அத்தனை பணிகளையும் எந்த சிரமமும் பாராமல் உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் டெல்லி வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்து சமவாய்ப்பை ஏற்படுத்தி தந்ததன் மூலம் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தைரியம், நம்பிக்கை நம்மாலும் முடியும் என்ற உறுதியை தேமுதிக விதையாக விதைத்து இருக்கிறது.
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பதற்கு இணங்க இந்த நம்பிக்கையே நாளை வெற்றியாக மாறி நல்ல எதிர்காலத்தை நம் மக்களுக்கு உருவாக்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை கருத்தில் கொண்டு தேமுதிக என்று தன் ஜனநாயக கடமையை ஆற்றும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications