தப்பா பேசாதீங்க.. தேமுதிகவும், த.மா.காவும் ம.ந.கூட்டணியில்தான் தொடர்கிறது: திருமாவளவன் பேட்டி
சென்னை: தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் மக்கள் நல கூட்டணியில்தான் நீடிக்கின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி வைப்பது என்பது பற்றி முடிவெடுக்க தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். 24ம் தேதி மக்கள் நல கூட்டணி சார்பில், நடைபெற உள்ள இப்தார் நிகழ்ச்சிக்கான நிரலில் தேமுதிக பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால் மக்கள் நலகூட்டணியோடு இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்த, தேமுதிக மற்றும் த.மா.கா கட்சிகள், தற்போது கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
சென்னையில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல கூட்டணியிலுள்ள ஒரு கட்சியான விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த செய்திகளை மறுத்துள்ளார்.
தமாகா மற்றும் தேமுதிக இரு கட்சிகளுமே மக்கள் நல கூட்டணியில் தொடருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் சட்டசபைக்குள் மோதலில் ஈடுபடுவதற்கு அதிருப்தி வெளிப்படுத்திய அவர், சட்டசபையில் ஆக்கப்பூர்வ விவகாரங்களை பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலேயே துரோகம் இழைத்தது அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என்று கூறிய திருமாவளவன், வயதில் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்வதை ஆளும் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications