தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டி: விஜயகாந்த்

டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
டெல்லியில் வாழும் தமிழர்கள் இதுவரை வாக்கு வங்கிகளாகவே பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எவரும் முன்வரவில்லை.
டெல்லி வாழ் தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர். டெல்லி வாழ் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவே மாநில சட்டசபை தேர்தலில் தேமுதிக போட்டியிடுகிறது. டெல்லி வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக எப்போதும் தேமுதிக போராடும்.
நான் இப்போது வந்துள்ளது கூட தேர்தல் வெற்றிக்காக அல்ல.. உங்கள் நலனுக்காகவே. திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மாஃபியாக்களை ஆதரிக்கின்றன. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
சலசலப்பு
வழக்கம் போல டெல்லி ஜந்தர் மந்தர் கூட்டத்திலும் சலசலப்பும் சர்ச்சையும் அரங்கேறி இருக்கிறது. விஜயகாந்த் பேசிக் கொண்டு இருக்கும்போதே கூட்டம் கலையத் தொடங்கியதால் அவரே, நான் ரொம்ப நேரம் பேசவில்லை.. நீங்கள் எல்லாம் அப்படியே கிளம்பிகிட்டே இருக்கீங்க.. நான் உங்களுக்கு நன்றி தெரிவித்து என்னுடைய பேச்சை முடித்துக் கொள்கிறேன் என்றார்.
அதைத் தொடர்ந்து கொஞ்சம் கோபமாக அங்கே நாலைஞ்சு பேர்,, இப்ப இங்க வாங்கடா.. தைரியமாக இருந்தா முன்னாடி வாங்கடா...பொட்டத்தனமாக என்று கூறிக் கொண்டிருந்த போதே இதை லைவ்வாக ஒளிபரப்பு செய்த கேப்டன் டிவி விஜயகாந்தின் வாய்ஸை மியூட் செய்துவிட்டது.
எங்க போனாலும் டென்சன்! டென்சன்!!












Click it and Unblock the Notifications