கருணாநிதியுடன், திருமா, ஜவாஹிருல்லா சந்திப்பு
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் திமுக கூட்டணித் தலைவர்களான திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்துப் பேசினர்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை இவர்கள் சந்தித்தனர். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையல், பேரறிவாளன் உள்பட 7 பேரின் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது. 7 பேரின் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது ஏமாற்றம் தருகிறது.

தமிழக தேர்தல் வாக்குப்பதிவின்போது தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவு ஆளும்கட்சியினர் பணம் பட்டுவாடா செய்ய ஏதுவாக இருந்தது என்றார்.
ஜவாஹிருல்லா கூறுகையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துள்ளது. ஆளும்கட்சியினரின் பணம் பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. பணம் பட்டுவாடா தொடர்பாக திமுக மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.
கருணாநிதியுடன் நடந்த சந்திப்பின்போது தேர்தலுக்குப் பிந்தைய நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications