திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று மாலை சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளார் ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருணாநிதி முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்குவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இதனை தெரிவித்தார். அப்போது மேலும் அவர் கூறுகையில், திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் மமக 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் தெரியவரும். எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதன் தலைவர் கருணாநிதி 6-வது முறையாக தமிழக முதலைமைச்சராக ஆவார் என ஜவாஹிருல்லா கூறினார்.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications