திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 சீட்... தொண்டர்கள் ஆறுதல்
சென்னை: திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. தொகுதி ஒதுக்கீட்டை ஸ்டாலின் உறுதிசெய்தார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்தார்.
தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனால், ஆவேசம் அடைந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் கடலூர், விழுப்புரம் உள்பட மாநிலம் முழுவதும் தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தை கட்சியின் அவசர கூட்டத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டினார். சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் இன்று காலை தொடங்குவதாக இருந்தது.
திருவள்ளூர் தொகுதி
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், விடுதலை சிறுத்தை கட்சிக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக கூறினார்.
ஏற்கனவே, விடுதலை சிறுத்தைக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவள்ளூர் தனித் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொதித்த தொண்டர்கள்
முன்னதாக, வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்ட விடுதலை சிறுத்தை கட்சியினர், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று முழக்கமிட்டபடியே அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.
வன்னியரசு மீது தாக்குதல்
தொண்டர்களை கட்சியின் முக்கிய நிர்வாகியான வன்னியரசு தடுத்து நிறுத்தினார். இதனால், ஆத்திரம் அடைந்த தொண்டர்கள், வன்னியரசை தாக்கினர்.
அறிவாலயம் விரைந்த திருமா
தகவல் அறிந்து திருமாவளவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர்களை சமாதானப்படுத்திய திருமாவளவன், பின்னர் காரில் அண்ணா அறிவாலயம் புறப்பட்டு சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 தொகுதி ஒதுக்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார். தி.மு.க.வுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
2 வது ஒதுக்கியது ஏன்?
ஒரு சீட் ஒதுக்கியதற்கு கொதிப்படைந்த தொண்டர்கள் தனித்து போட்டியிட்டு வலிமையை நிரூபிக்க வேண்டும் என்று கருத்து கூறி வந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையிலும், கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிச் சென்று விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் திருவள்ளூர் தொகுதியை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் கேட்டு திருவள்ளூர் தொகுதியாவது கிடைத்ததே என்று தொண்டர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications