விட்டுவிடுவோமா? ஓட்டுக்கு ரூ2,000.. டார்கெட் 20,000 வாக்காளர்கள்... கரன்சிகளுடன் களமிறங்கிய திமுக!
அதிமுக கோஷ்டிகளுக்கு சளைக்காமல் திமுகவும் பணப்பட்டுவாடாவில் களமிறங்க உள்ளது. ஓட்டுக்கு ரூ2,000 கொடுக்கும் முடிவில் இருக்கிறதாம் திமுக.
சென்னை: ஆர்.கே.நகரில் மற்ற கட்ச்களை விட பிரசாரத்தில் பின்தங்கியிருந்த திமுக இப்போது விறுவிறுவென களமிறங்கிவிட்டது. ஒரு ஓட்டுக்கு ரூ 2,000 வீதம் 20,000 வாக்காளர்களை எதிரணியில் இருந்து இழுத்தாலே போதும் என புதிய வியூகத்துடன் வைட்டமின் 'ப' வை களமிறக்கியுள்ளது திமுக.
ஆர்.கே.நகர் தொகுதியில் வலம் வருவோரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்தான் விழுந்து விழுந்து ஓட்டு கேட்கிறார்.. அதேநேரத்தில் திமுக நிர்வாகிகளோ சோர்ந்தே போயுள்ளனர். காரனம் வைட்டமின் ப சப்ளையே இல்லாததுதான் என புலம்பி வந்தனர்.

பணப்பட்டுவாடா
இன்னொரு பக்கம் ஓபிஎஸ் அதிமுகவின் மதுசூதனன், சசி அணி தினகரன் கனஜோராக பணத்தை வாரி இறைத்தனர். இரண்டு அணி அதிமுகவினரும் இன்றைக்குள் பணப்பட்டுவாடா செய்து முடிப்பதில் தீவிரமாக உள்ளனர்.

ஸ்லீப்பர் செல்கள்
அதேபோல் சோர்ந்துகிடந்த திமுகவினரையும் வளைப்பதில் தினகரன் கோஷ்டி மும்முரம் காட்டி வந்தது. இதையெல்லாம் ஸ்டாலினின் ஸ்லீப்பர் செல்கள் அண்ணா அறிவாலயத்துக்கு தெரிவித்தன.

புதிய வியூகம்
இதனைத் தொடர்ந்து தற்போது திமுக தலைமை ஒரு புதிய வியூகம் வகுத்துள்ளதாம். அதாவது ஓபிஎஸ் அதிமுக, சசி கோஷ்டியில் இருந்து 20,000 வாக்காளர்களை குறிவைத்து இழுப்பது...அவர்களுக்கு தலா ரூ2,000 ஓட்டுகள் தருவது என்பதுதான் இந்த வியூகமாம்.

முறியடிக்கவும் தீவிரம்
இரு அணியில் இருந்தும் இப்படி கணிசமான வாக்காளர்களை தங்கள் பக்கம் கொண்டு வந்தாலே எளிதில் வென்றுவிடலாம் என்பது திமுக தலைமையின் வியூகம். இதனையும் முறியடிக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டுகிறது அதிமுக கோஷ்டிகள்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications