விஜயதசமி நாளில் சட்டசபைத் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்த திமுக!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
விஜயதசமி நாளில் ஒரு செயலை தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் 2016ம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது திமுக.
ஆர்.எஸ். பாரதி, தா.மோ.அன்பரசன், பொன்முடி, பொன். முத்துராமலிங்கம், என்.பெரியசாமி உள்ளிட்ட 28 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க. தலைமைக்கழகஅறிவிப்பு:
நடைபெற உள்ள சட்டசபைப் பொதுத் தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்திடவும், நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் (பி.எல்.எ.-2) தங்களோடு இணைந்து பணியாற்றிட 10 முதல் 15 பேரை நியமித்து கொள்ளவும், அந்தந்த தொகுதிகளில் ஏற்படும் மக்களுக்கான பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எதிராக நடத்திய, நடைபெற வேண்டிய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்திட அறிவுறுத்தவும், தி.மு.க. ஆக்கப்பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் உரிய ஆலோசனைகளை சட்டசபை தேர்தல் முடியும் வரை, அவ்வப்போது தலைமைக் கழகத்திற்கு அறிக்கையின் வாயிலாகவும் - நேரடியாகவும் தெரிவித்திட மாவட்ட வாரியாக பின்வரும் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

ஒளிவுமறைவில்லாமல்
அவர்கள், எவ்வித ஒளிவுமறைவுமின்றி அங்குள்ள குறைகள் குறித்து தலைமைக் கழகத்திற்கு அவ்வப்போது தெரிவிப்பார்கள். இத்தேர்தல் பணி பொறுப்பாளரோடு அந்தந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொறுப்பாளர்களின் பெயர்கள்.
சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஆர்.எஸ். பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திற்கு கு.பிச்சாண்டி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தா.மோ.அன்பரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்முடி
வேலூர் மாவட்டத்திற்கு ஆர்.காந்தி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு எ.வ.வேலு, விழுப்புரம் மாவட்டத்திற்கு க.பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்டத்திற்கு சாக்கோட்டை அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கே.என்.நேரு
நாகை மாவட்டத்திற்கு திருவிடைமருதூர் எஸ்.ராமலிங்கம், திருவாரூர் மாவட்டத்திற்கு டாக்டர் மஸ்தான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி , பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்திற்கு சுப்புலட்சுமி ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொங்கலூர் பழனிச்சாமி
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எஸ்.எஸ். பழனிமாணிக்கம், சேலம் மாவட்டத்திற்கு பொங்கலூர் பழனிசாமி, நாமக்கல் மாவட்டத்திற்கு காந்திசெல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

என்.கே.கே.பி ராஜா
தருமபுரி மாவட்டத்திற்கு செல்வகணபதி, கோவைக்கு மு.கண்ணப்பன், திருப்பூர் மாவட்டத்திற்கு என்.கே.கே.பி. ராஜா, ஈரோடு மாவட்டத்திற்கு எஸ்.ரகுபதி, நீலகிரிக்கு மு.பெ.சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தங்கம் தென்னரசு
மதுரைக்கு தங்கம் தென்னரசு, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இ.பெரியசாமி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கே.ஆர்.பெரிய கருப்பன், சிவகங்கை மாவட்டத்திற்கு சத்திய மூர்த்தி, விருதுநகர்- மாவட்டத்திற்க கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொன்.முத்துராமலிங்கம்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு பொன்.முத்துராமலிங்கம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்.பெரியசாமி, கன்னியாகுமரி மாவட்டத்திற்க எஸ்.ஆஸ்டின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications